பொடுகு பிரச்சனை வர காரணம் – வராமல் தடுக்க என்ன செய்யலாம்?

0

தலையின் மேற்புற தோலில் உள்ள இறந்த போன செல்கள் செதில் செதிலாக உதிரும். இதைதான் நாம் பொடுகு என்கிறோம்.

பொடுகு ஏன் வருகிறது?

1. வறட்சியாக இருக்கும் சருமத்தினால் வரும்.

2. அவசரமாக தலைக்கு குளிப்பது. நன்றாக தலையை துவட்டமல் இருப்பதால் சோப்பு தண்ணீர் தலையில் தங்கிவிடும். இதனால் பொடுகு உற்பத்தியாகிறது.

3. எப்பொழுதும் அழுக்கு தலையுடன் இருப்பது.

4. தலையில் வியர்வை உற்பத்தியாகி அந்த வியர்வை தண்ணீர் தலையில் தங்க நேரிடும். இதனாலும் பொடுகு வருகிறது.

5. “பிடி ரோஸ்போரம் ஓவல்” என்ற நுண்ணியிர் கிருமியினாலும் பொடுகு பிரச்சனை வரலாம்.

6. எக்ஸீமா(Eczema), சொரியாஸிஸ்(Psoriasis) போன்ற தோல் நோய்களாளும் பொடுகு வரலாம்.

7. அதிகமாக ஷாம்பு பயன்படுத்தினாலும் வரலாம்.

பொடுகு வருவதை தவிர்க்க என்ன செய்ய வேண்டும்?

1. ஒருவர் பயன்படுத்திய சீப்பு தலையாணை, துண்டு போன்றவற்றை மற்றவர் பயன்படுத்தக்கூடாது.

2. தலை பகுதியை எப்பொழுதும் சுத்தமாக வைத்திருப்பது.

3. கொழுப்பு சத்துள்ள நெய், பால், வெண்ணெய் முதலிய உணவுகளை சேர்க்க வேண்டும்.

பொடுகு தொல்லை நீங்க என்ன செய்யலாம்?

* சின்ன வெங்காயம் கொஞ்சம் எடுத்து அரைத்து தலையில் தேய்த்து அப்புறம் குளிக்கனும்.

* பாலுடன் மிளகு பவுடரை சேர்த்து தலையில் தேய்த்து அப்புறம் குளிக்கனும்.

* வாரம் ஒரு முறையாவது நல்லெண்ணெய் தேய்த்து குளிக்க வேண்டும்.

* பசலை கீரையை அரைத்து தலையில் தேய்த்து குளிச்சால் பொடுகுக்கு ரெம்ப நல்லது.

* வெந்தய பவுடரை தலையில் தேய்த்து குளித்தால் பொடுகு தொல்லை குறையும்.

* வேப்பிலை சாறும் துளசி சாறும் கலந்து தலையில் தேய்க்கலாம்.

Leave A Reply

Your email address will not be published.