மாணவ – மாணவிகள் உயர் கல்வி அவசியம்

0

கல்விதான் ஒரு மனிதனை பண்பு உள்ளவனாக மாற்றுகிறது. அனைவரும் கட்டாயமாக கல்வி கற்க வேண்டும் என்பதற்காக மத்திய அரசு கட்டாய கல்வி உரிமை சட்டத்தை நிறைவேற்றியது. இதனால் 8-ம் வகுப்பு வரை மாணவ-மாணவிகள் கட்டாயமாக கல்வி கற்கும் நிலை ஏற்பட்டு உள்ளது.

பிளஸ்-2 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டு உள்ளன. இதையடுத்து மாணவ-மாணவிகள் உயர் கல்வியில் சேர்ந்து படிக்க வேண்டும். ஆனால் எந்த படிப்பை தேர்வு செய்வது என்பதில் மாணவ-மாணவிகள் பல்வேறு குழப்பங்கள் இருக்கும். ஆனால் ஒவ்வொருவரும் தாங்கள் பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையில் விருப்பமான பாடத்தை தேர்வு செய்து படிக்க வேண்டும். மேல்நிலை கல்வியுடன் படிப்பை விட்டு விடக் கூடாது. நாட்டில் உயர்கல்வி கற்றவர்களின் எண்ணிக்கை தற்போதும் குறைவாகவே உள்ளது.

கல்லூரி படிப்பை தொடர கிராமப்புற மாணவர்கள், நகரங்களை தேடி செல்ல வேண்டிய நிலை அவர்கள் மனம் தளர்ந்து விடாமல் விருப்பமான படிப்பு மற்றும் கல்லூரியை தேர்வு செய்து படிக்க வேண்டும். எந்த படிப்பை தேர்வு செய்வது என்பதில் மாணவ- மாணவிகளுக்கு பெற்றோர்கள் வழிகாட்டிகளாக இருக்க வேண்டும். மாறாக மாணவ- மாணவிகளை நிர்பந்தம் செய்து, அவர்களின் விருப்பத்திற்கு எதிராக செயல்பட்டு விடக்கூடாது.

வேலை, சம்பளம் என்பதை மட்டும் அடிப்படையாக கொண்டு படிப்பை தேர்வு செய்து விடக்கூடாது. விருப்பமான துறைகளில் தங்களுக்கு உள்ள வாய்ப்புகளை அறிந்து படிக்க வேண்டும். அந்த கல்வி தான் வாழ்க்கை முழுவதற்கும் நிறைவை தருவதாக இருக்கும்.

Leave A Reply

Your email address will not be published.