வோடபோன் நிறுவனம் ரூ.16 விலையில் 1 ஜி.பி. டேட்டா வழங்கும் புதிய சலுகை

0

வோடபோன் நிறுவன வாடிக்கையாளர்களுக்கு ரூ.16 விலையில் புதிய பிரீபெயிட் சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது. புதிய ரூ.16 சலுகையில் பயனர்களுக்கு 1 ஜி.பி. டேட்டா வழங்கப்படுகிறது. இச்சலுகை முதற்கட்டமாக அசாம், கோவா, குஜராத் மற்றும் மகாராஷ்டிரா உள்ளிட்ட வட்டாரங்களில் மட்டும் அறிவிக்கப்பட்டுள்ளது.

வோடபோன் ரூ.16 சலுகையை பயனர்கள் வோடபோன் வலைதளம், மை வோடபோன் ஆப் மற்றும் விற்பனையாளர்களிடம் கிடைக்கிறது. இத்துடன் ரூ.33, ரூ.49 மற்றும் ரூ.98 விலையில் டேட்டா சலுகைகளை வோடபோன் வழங்குகிறது.

ரூ.16 சலுகையில் வாய்ஸ் கால் அல்லது எஸ்.எம்.எஸ். போன்ற பலன்கள் எதுவும் வழங்கப்படவில்லை. ஒரு நாள் வேலிடிட்டி கொண்டிருக்கும் வோடபோன் சலுகையில் வேலிடிட்டியை நீட்டிக்க முடியாது. முதற்கட்டமாக சில வட்டாரங்களில் மட்டும் அறிவிக்கப்பட்டிருக்கும் இச்சலுகை விரைவில் மற்ற வட்டாரங்களில் அறிவிக்கப்படும் என தெரிகிறது.

Leave A Reply

Your email address will not be published.