வாணரப்பேட்டை அருகே பெயிண்டர் பலி- போலீசார் விசாரணை

0

வாணரப்பேட்டை:

வாணரப்பேட்டை அன்னை நகரை சேர்ந்தவர் சிவசங்கர் (27), பெயிண்டர். குடிப்பழக்கம் உள்ள இவர் கஞ்சா பழக்கத்து ஆளானார். இதனால் எப்போதும் போதை மயக்கத்திலேயே இருந்து வந்தார். இந்த நிலையில் நேற்று இரவு சிவசங்கர் வீட்டில் மயங்கி கிடந்தார். இதை பார்த்த அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு புதுவை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இதுகுறித்த புகாரின் பேரில் முதலியார்பேட்டை போலீசார் சிவசங்கர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கதிர் காமம் மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.