நோட்ரே-டேம் தேவாலயம் 5 வருடங்களில் சீரமைக்கப்படும்- பிரான்ஸ் அதிபர் தகவல்

0

பாரீஸ்:

பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நோட்ரே-டேம் என்ற இடத்தில் உலக புகழ்பெற்ற கத்தோலிக்க தேவாலயம் உள்ளது. அந்த தேவாலயத்தில் நேற்று முன்தினம் திடீரென தீப்பிடித்தது. சில நிமிடங்களில் தீ, தேவாலயம் முழுவதும் பரவி கொழுந்து விட்டு எரிந்தது. தீ மளமளவென மற்ற இடங்களுக்கும் பரவியதால் தேவாலயத்தின் மேற்கூரை மற்றும் பக்கவாட்டு சுவர்கள் பலத்த சேதமடைந்து இடிந்து விழுந்தன.

தகவல் அறிந்து சம்ப இடத்திற்கு வந்த நூற்றுக்கணக்கான தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். தீ விபத்து குறித்து தெரியவந்ததும், சம்பவ இடத்திற்கு விரைந்த பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மெக்ரான் நிலைமையை ஆய்வு செய்தார்.

பின்னர் அவர் கூறும்போது, இந்த தீ விபத்து ஒரு மிக மோசமான சோக நிகழ்வு, இந்த விபத்து தவிர்க்கப்பட்டிருக்கலாம். அடுத்த 5 வருடத்திற்குள் தேவாலயம் கட்டி முடிக்கப்பட வேண்டும் என்று தான் விரும்புகிறேன். மனித தவறுகளால் ஏற்படும் பாதிப்புகளை நிறைய முறை சரிசெய்துள்ளோம். அந்த வகையில் இதையும் விரைந்து சரி செய்வோம் என்றார்.

Leave A Reply

Your email address will not be published.