திருப்பத்தூர் அருகே வாக்காளர்களுக்கு பணம் வினியோகம் செய்த 3 பேர் கைது

0

திருப்பத்தூர்:

திருப்பத்தூர் அருகே உள்ள காக்கனாம் பாளையம் பகுதியில் தேர்தல் உதவி ஆணையாளர் ராஜேந்திரன் தலைமையில் பறக்கும் படையினர் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அந்த பகுதியில் வாக்காளர்களுக்கு பணம் வினியோகம் செய்து கொண்டிருந்தவரை பிடித்து விசாரணை நடத்தினர். அதில் அவர் அதே பகுதியை சேர்ந்த லோகநாதன் என்பது தெரியவந்தது. இதையடுத்து அவரிடம் இருந்த ரூ.27 ஆயிரம் பணத்தை பறிமுதல் செய்தனர்.

இதேபோல் மரிமாணிகுப்பம் பகுதியில் வாக்காளர்களுக்கு பணம் வினியோகம் செய்து கொண்டிருந்த காளியப்பன், கோபி ஆகியோரை பிடித்து அவர்களிடம் இருந்த ரூ.38 ஆயிரம் பணத்தை பறிமுதல் செய்தனர். இதையடுத்து அதிகாரிகள் பணம் வினியோகம் செய்த 3 பேரையும் போலீசாரிடம் ஒப்படைத்தனர். போலீசார் 3 பேரிடமும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.