தற்போது கடன் சுமையில் அவதிப்படும் ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்துக்கு அனுதாபம் தெரிவித்த விஜய் மல்லையா

0

லண்டன்:

முக்கியத்துவம் வாய்ந்த விமான போக்குவரத்து துறையில் தனியார் நிறுவனங்கள் இணைந்த பின்னர் போட்டி மனப்பான்மையில் பயணிகளுக்கு ஆதரவாக சில நிறுவனங்கள் கட்டணங்களை குறைத்தும், சிறப்பு சலுகைகளை அறிவித்தும் வாடிக்கையாளர்களை முன்பு கவர்ந்திழுத்தன.இந்த தொழில் போட்டியில் கிங் பிஷர் உள்ளிட்ட சில ஏர்லைன்ஸ் நிறுவனங்கள் கடுமையான இழப்பை நேரிட்டன. அந்த வகையில் , ஜெட் ஏர்வேஸ் நிறுவனமும் கடுமையான பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவித்து வருகிறது.

இதன் காரணமாக ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தில் பணியாற்றும் ஊழியர்களுக்கும் சம்பளம் கொடுக்கமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து ஊழியர்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இது தொடர்பாக கிங் பிஷர் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் தலைவரான விஜய் மல்லையா தனது டுவிட்டர் பக்கத்தில், ‘கிங் பிஷர் ஏர்லைன்சுக்கு நேரடி போட்டியாக இருந்தது ஜெட் ஏர்வேஸ் நிறுவனமாகும். இப்போது கடன் சுமையால் இருக்கும் இந்நிறுவனத்தின் தலைவர் நரேஷ் கோயலுக்கு என் அனுதாபத்தை தெரிவித்துக் கொள்கிறேன்’ என்று பதிவிட்டு கொண்டுள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.