குடும்ப தகராறு காரணமாக ராணுவ வீரர் தூக்குபோட்டு தற்கொலை

0

கண்ணமங்கலம்:

சந்தவாசல் அருகே கிருஷ்ணாபுரம் கிராமத்தை சேர்ந்தவர் குமார் (வயது 43). ராணுவ வீரரான இவர் காஷ்மீரில் உரி என்ற இடத்தில் பணியாற்றி வருகிறார். இவர் 35 நாள் விடுமுறையில் கடந்த மார்ச் மாதம் சொந்த ஊருக்கு வந்திருந்தார்.

கடந்த 10 நாட்களுக்கு முன்பு குமாருக்கும், அவரது மனைவி அமுதாமைவிற்கும் (29) இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதன் காரணமாக அமுதாமை அவரது தாய் வீட்டுக்கு சென்று விட்டார். மனைவி பிரிந்து சென்ற ஏக்கத்தில் குமார் மன உளைச்சலுடன் இருந்துள்ளார். நேற்று முன்தினம் இரவு வேப்ப மரத்தில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.

நேற்று காலை அந்த வழியாக மாடு மேய்க்க சென்றவர், குமார் தூக்கில் பிணமாக தொங்குவதைப் பார்த்து சந்தவாசல் போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளார். இது குறித்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Leave A Reply

Your email address will not be published.