ஒப்போ நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட்போன் இந்தியாவில் அடுத்த வாரம் அறிமுகம்

0

ஒப்போ நிறுவனம் தனது ஃபிளாக்‌ஷிப் ஸ்மார்ட்போன் மாடலான ஒப்போ எஃப்11 ப்ரோ ஸ்மார்ட்போனின் அவெஞ்சர்ஸ் எடிஷனை ஏப்ரல் 24 ஆம் தேதி அறிமுகம் செய்ய இருக்கிறது.

இந்நிலையில், ஒப்போ புதிய பட்ஜெட் ரக ஸ்மார்ட்போனனை இந்தியாவில் அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது. ஒப்போ ஏ5எஸ் என அழைக்கப்படும் இந்த மாடலில் 6.2 இன்ச் ஹெச்.டி. பிளஸ் 1520×720 பிக்சல் டிஸ்ப்ளே, மீடியாடெக் ஹீலியோ பி35 ஆக்டா-கோர் சிப்செட், IMG GE8320 GPU, 2 ஜி.பி. / 3 ஜி.பி. / 4 ஜி.பி. ரேம் கொண்டிருக்கிறது. மெமரியை பொருத்தவரை 32 ஜி.பி. மற்றும் 64 ஜி.பி. என இருவித வேரியண்ட்களில் கிடைக்கும் என தெரிகிறது.

புகைப்படங்களை எடுக்க 13 எம்.பி. + 2 எம்.பி. டூயல் பிரைமரி கேமரா, f/2.2 + f/2.4, முன்புறம் 8 எம்.பி. செல்ஃபி கேமரா, f/2.0 வழங்கப்பட்டுள்ளது. ஆண்ட்ராய்டு 8.1 ஓரியோ இயங்குதளம் சார்ந்த கலர் ஓ.எஸ். 8.1 மற்றும் 4230 எம்.ஏ.ஹெச். பேட்டரி வசதியும் கொண்டிருக்கிறது.

ஒப்போ ஏ5எஸ் சிறப்பம்சங்கள்:

– 6.2 இன்ச் 1520×720 பிக்சல் ஹெச்.டி. பிளஸ் டிஸ்ப்ளே, வாட்டர் டிராப் நாட்ச்
– ஆக்டா-கோர் மீடியாடெக் ஹீலியோ பி35 12 என்.எம். பிராசஸர்
– IMG PowerVR GE8320 GPU
– 2 ஜி.பி. / 3 ஜி.பி. / 4 ஜி.பி. ரேம்
– 32 ஜி.பி. / 64 ஜி.பி. மெமரி
– மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
– ஆண்ட்ராய்டு 8.1 ஓரியோ மற்றும் கலர் ஓ.எஸ். 8.1
– 13 எம்.பி. பிரைமரி கேமரா, f/2.2
– 2 எம்.பி. இரண்டாவது பிரைமரி கேமரா, f/2.4
– 8 எம்.பி. செல்ஃபி கேமரா, f/2.0
– கைரேகை சென்சார்
– 3.5 எம்.எம். ஆடியோ ஜாக், எஃப்.எம். ரேடியோ
– 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்
– 4230 எம்.ஏ.ஹெச். பேட்டரி

ஒப்போ ஏ5எஸ் ஸ்மார்ட்போன் ஏற்கனவே ஒப்போ வலைதளத்தில் பட்டியலிடப்பட்டுள்ளது. இதன் விலை இந்தியாவில் ரூ.10,000-க்குள் அந்நிறுவனம் நிர்ணயம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

Leave A Reply

Your email address will not be published.