இந்தோனேசியாவின் அடுத்த ஜனாதிபதியை தேர்ந்தெடுப்பதற்கான வாக்குப்பதிவு இன்று துவங்குகிறது

0

ஜகார்த்தா:

உலகின் மிகப்பெரிய முஸ்லிம் நாடான இந்தோனேசியாவில் இன்று மிகப்பெரிய பொதுத்தேர்தல் நடக்கிறது . முதல் முறையாக, ஜனாதிபதி தேர்தல், பாராளுமன்றம் மற்றும் சட்டமன்ற தேர்தல்கள் ஒரே நாளில் நடத்தப்படுகிறது. அதன்படி இன்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. வாக்காளர்கள் ஆர்வத்துடன் வாக்குச்சாவடிகளுக்கு சென்று தங்கள் வாக்குகளை பதிவு செய்கின்றனர். சில வாக்காளர்கள் தங்கள் பகுதியில் உள்ள மசூதிகளுக்குச் சென்று பிரார்த்தனை செய்துவிட்டு, ஓட்டு போட செல்கின்றனர்.

இந்த தேர்தலில் சுமார் 2.45 லட்சம் வேட்பாளர்கள் போட்டியில் இறங்கியுள்ளனர் . 8 லட்சம் வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த ஜனாதிபதி தேர்தலில், தற்போதைய ஜனாதிபதியும், இந்தோனேசிய மக்களாட்சிக் கட்சி (போராட்டம்) தலைவருமான ஜோகோ விடோடோவும் (வயது 57), முன்னாள் ராணுவ தளபதியும் கெரிந்த்ரா கட்சி தலைவருமான பிரபோவோ சுபியாண்டோவும் (வயது 67) ஆகியோர் போட்டியிடுகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.