இந்தியா, பாகிஸ்தான் இடையேயான வர்த்தகம் மீண்டும் தொடங்கியது

0

ஜம்மு:

கடந்த ஏப்ரல் 1-ம் தேதி எல்லைக்கட்டுபாட்டுக் கோடு பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் நடத்திய துப்பாக்கிச்சூட்டில், பூஞ்ச் பகுதியில் பிஎஸ்எஃப் வீரர் உள்பட 3 பேர் உயிரிழந்தனர். 5 பாதுகாப்புப் படையினர் உள்பட 24 பேர் படுகாயமடைந்தனர். இதன் காரணமாக பயணிகள் பேருந்து போக்குவரத்து தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.

2 வாரங்களுக்கு மேல் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த பயணிகள் வாகனப்போக்குவரத்து மற்றும் எல்லைத் தாண்டிய வர்த்தகம் மீண்டும் நேற்று முதல் தொடங்கியது. இதைத்தொடர்ந்து, எல்லைக்கட்டுபாட்டுக் கோட்டை கடந்து நேற்று ஒரே நேரத்தில் 70 சரக்கு லாரிகள் எல்லையைக் கடந்து பொருள்களை ஏற்றி சென்றது.

Leave A Reply

Your email address will not be published.