ஸ்பெயின் தலைநகரில் உள்ள வெளிநாட்டு தூதரக வளாகத்துக்கு வந்த வெடிகுண்டு மிரட்டல்

0

மாட்ரிட்:

ஸ்பெயின் தலைநகர் மாட்ரிட் நகரில் அமைந்துள்ள வானளாவிய கட்டிட வளாகத்தில் பிரிட்டன், நெதர்லாந்து, ஆஸ்திரேலியா, கனடா ஆகிய வெளிநாடுகளின் தலைமை தூதரகங்கள் உள்ளன. இந்நிலையில், இந்த கட்டிடத்தில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாகவும், விரைவில் அனைத்து தூதரகங்களும் தவிடுப்பொடியாகும் என்றும் இன்று விடுத்த மிரட்டலால் சம்பவ இடத்துக்கு மோப்ப நாய்களுடன் வெடிகுண்டு நிபுணர்கள் குவிந்தனர். தூதரகங்களின் பணியாளர்கள், அதிகாரிகள் மற்றும் அந்த கட்டிடத்தில் உள்ள அனைவரும் அவசரமாக வெளியேற்றப்பட்டு வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.