ஹூவாயின் ஹானர் பிராண்டு புதிய பட்ஜெட் விலை ஸ்மார்ட்போன் அறிமுகம்

0

ஹூவாயின் ஹானர் பிராண்டு ரஷ்யாவில் புதிய ஹானர் 8ஏ ப்ரோ ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்துள்ளது.

இதில் 6.0 இன்ச் ஹெச்.டி. பிளஸ் வாட்டர் டிராப் நாட்ச் டிஸ்ப்ளே, 87 சதவிகித ஸ்கிரீன்-டு-பாடி ரேஷியோ கொண்டிருக்கிறது. இத்துடன் மீடியாடெக் ஹீலியோ பி35 12 என்.எம். பிராசஸர், 3 ஜி.பி. ரேம், ஆண்ட்ராய்டு 9.0 இயங்குதளம், 13 எம்.பி. பிரைமரி கேமரா, f/1.8, 8 எம்.பி. செல்ஃபி கேமரா வழங்கப்பட்டுள்ளது.

கைரேகை சென்சார் கொண்டிருக்கும் ஹானர் 8ஏ ப்போ ஸ்மார்ட்போனில் ஃபேஸ் அன்லாக் வசதியும், டூயல் சிம் மற்றும் மைக்ரோ எஸ்.டி. கார்டு ஸ்லாட்கள், 3000 எம்.ஏ.ஹெச். பேட்டரி கொண்டிருக்கிறது.

ஹானர் 8ஏ ப்ரோ சிறப்பம்சங்கள்:

– 6.0 இன்ச் 1560×720 பிக்சல் ஹெச்.டி. பிளஸ் 19:5:9 2.5D வளைந்த கிளாஸ் டிஸ்ப்ளே
– 2.3 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டா-கோர் மீடியாடெக் ஹீலியோ பி35 12 என்.எம். பிராசஸர்
– 680 MHz IMG பவர் வி.ஆர். GE8320 GPU
– 3 ஜி.பி. ரேம்
– 64 ஜி.பி. மெமரி
– மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
– ஆண்ட்ராய்டு 9.0 பை மற்றும் EMUI 9.0
– டூயல் சிம்
– 13 எம்.பி. பிரைமரி கேமரா, எல்.இ.டி. ஃபிளாஷ், f/1.8
– 8 எம்.பி. செல்ஃபி கேமரா, f/2.0
– கைரேகை சென்சார்
– டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்
– 3020 எம்.ஏ.ஹெச். பேட்டரி

ஹானர் 8ஏ ப்ரோ ஸ்மார்ட்போன் பிளாக் மற்றும் புளு நிறங்களில் கிடைக்கிறது. இதன் விலை 217 டாலர்கள் (இந்திய மதிப்பில் ரூ.15,055) என அந்நிறுவனம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.