வருகிற 22-ந் தேதி நிர்மலாதேவி உயர்நீதிமன்றத்தில் ஆஜராக உத்தரவு

0

மதுரை:

அருப்புக்கோட்டை பேராசிரியை நிர்மலாதேவி, மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்த வழக்கில் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கில் அவருக்கு உயர்நீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ளது.

இந்த நிலையில் அரசு கூடுதல் வழக்கறிஞர் அரவிந்த்பாண்டியன், மதுரை உயர்நீதிமன்ற நீதிபதிகள் கிருபாகரன், சுந்தர் ஆகியோர் முன்பு ஆஜராகி நிர்மலாதேவி வழக்கு ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.

இந்த நிலையில், நிர்மலா தேவி பற்றிய செய்திகள் தமிழ் வார இதழில் தொடர்ந்து எழுதப்பட்டு வருகிறது. ஆகவே அந்த வழக்கை விரைந்து விசாரிக்க உத்தரவிட வேண்டும் என்று முறையீடு செய்தார்.

அதை கேட்ட நீதிபதிகள், ஏற்கனவே நிர்மலாதேவி நேரில் ஆஜராகி பல கேள்விகளுக்கு விளக்கம் அளித்துள்ளார். அவரிடம் மேலும் பல சந்தேகங்களுக்கு விளக்கம் கேட்க வேண்டி உள்ளதால் வருகிற 22-ந் தேதி மதுரை உயர்நீதிமன்ற கிளை நீதிபதிகள் அறையில் நேரில் ஆஜராக வேண்டும் என்று உத்தரவிட்டனர்.

Leave A Reply

Your email address will not be published.