சென்னை விமான நிலையத்தில் பெண் ஊழியர் மயங்கி விழுந்து பலி

0

ஆலந்தூர்:

திரிசூலத்தை சேர்ந்தவர் கவுரி (வயது 40). இவர் சென்னை விமான நிலையத்தில் வாகனம் நிறுத்தும் இடத்தில் டோக்கன் வழங்கும் வேலை செய்து வந்தார். இன்று காலை அவர் வழக்கம் போல் வாகன ஒட்டிகளுக்கு டோக்கன் வழங்கிக் கொண்டிருந்தார். அப்போது திடீரென அவர் மயங்கி விழுந்தார்.

இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த அருகில் இருந்தவர்கள் கவுரியை மீட்டு சர்வதேச விமான நிலையத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் கவுரி ஏற்கனவே மாரடைப்பால் இறந்து விட்டதாக கூறினர். இது குறித்து விமான நிலைய போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.