சூப்பரான பைனாபிள் கேசரி செய்வது எப்படி?

0

பைனாபிள் கேசரி செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்:

ரவை – 1 கப்
பால் – 1 1/2 கப்
பைனாப்பிள்-1 /4 பழம்
உப்பு – 1 சிட்டிகை
தண்ணீர் -1 கப்
சக்கரை -2 கப்
நெய் – 6 மேஜை கரண்டி
முந்தரி – 10
பைனாப்பிள் கலர் -1 சிட்டிகை
பைனாப்பிள் எசன்ஸ்-2 மேஜை கரண்டி

செய்முறை:

முதலில் தேவையான அளவு அதாவது மேசைக் கரண்டி நெய் ஊற்றி முந்திரி நன்கு வறுத்து எடுத்து தனியாக வைக்கவும்.

வாணலியில் முன்று மேசைக் கரண்டி நெய்யை ஊற்றி ரவையை சிமிழில் வைத்து நன்கு வாசம் வரும் வரை மொரு மொரு என வறுத்து தனியாக வைக்கவும்.

பைனாப்பிளை தோல் சிவி சின்னஞ் சிறு துண்டுகளாக வெட்டவும். பைனாப்பிள் துண்டுகளை சக்கரையில் பிறட்டி ஒரு மணி நேரம் உறவிடவும், வாங்கி வைத்துள்ள பால் மற்றும் தண்ணீரை கலருடன் கலந்து கொதிக்கவிடவும்.

தண்ணீர் நன்றாக கொதி வரும்போது ரவையை சிறிது சிறிதாக கலந்து கட்டி பிடிக்காமல் நன்றாக கிளறவும், ரவை சற்றே முக்கால் பாகம் நன்றாக வெந்தவுடன் உப்பு சக்கரை மற்றும் பைனப்பிள்ளை சேர்த்து மூன்று நிமிடம் நன்றாக கிளறி விடவும்.

பின்னர் வருத்த முந்திரி மற்றும் பைனாப்பிள் எசன்ஸ் சேர்த்து நன்கு கிளறி பரிமாறலாம்.

சுவையான பைனாப்பிள் கேசரி தயார்.

Leave A Reply

Your email address will not be published.