வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராம் சேவை முடங்கிய காரணம் – ஃபேஸ்புக் விளக்கம்

0

உலகின் பல்வேறு பகுதிகளில் ஃபேஸ்புக்கின் மெசஞ்சர் மற்றும் வாட்ஸ்அப் செயலிகளில் குறுந்தகவல் அனுப்புவதில் பயனர்கள் பிரச்சனைகளை எதிர்கொண்டனர். இதே போன்று ஃபேஸ்புக்கின் இன்ஸ்டாகிராம் சேவைக்கும் தடங்கல் ஏற்பட்டது. பயனர்கள் சேவை முடக்கம் பற்றி வலைதளங்களில் தெரிவிக்க துவங்கினர்.

இதற்கு ஃபேஸ்புக் சார்பில் பதில் அளிக்கப்பட்டுள்ளது. ஃபேஸ்புக் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில், ஃபேஸ்புக் நிறுவன செயலிகளில் சிலவற்றை இயக்குவதில் சிரமம் ஏற்பட்டதை நாங்கள் அறிவோம். இந்த பிரச்சனையை மிக விரைவில் சரி செய்வதற்கான பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இத்துடன் சேவை முடங்கியதிற்கு டிஸ்ட்ரிபியூட்டெட் டினையல் ஆஃப் சர்வீஸ் (DDoS) சைபர் தாக்குதல் காரணமில்லை என ஃபேஸ்புக் தெரிவித்துள்ளது.

ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் மொபைல் செயலிகள் சீராக வேலை செய்தாலும், போஸ்ட்களை அப்லோடு செய்வதில் சில பயனர்கள் சிரமம் எதிர்கொண்டதாக தெரிவித்திருக்கின்றனர். பிரபல சமூக வலைதளங்களின் சேவை முடங்கியதை தொடர்ந்து பயனர்கள் ட்விட்டர் பக்கத்தில் தங்களது பிரச்சனைகளை பதிவிட்டனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.