மெக்சிகோவில் ரத்தவெள்ளத்தில் உயிருக்கு போராடிய காதலனை கட்டிப்பிடித்து அழுத காதலி – நெஞ்சை உருக்கும் காணொளி இணையத்தில் வைரல்

0

மெக்சிகோ சிட்டி:

மெக்சிகோவில் இந்த பயங்கர சம்பவம் நடைபெற்றுள்ளது. ரத்தம் வெள்ளத்தில் உயிருக்கு போராடிய காதலனை, அவருடைய காதலி கட்டிப்பிடித்து உயிரைவிட்டு விடாதே என கெஞ்சியபடியே கதறி அழும் காணொளி காட்சியானது இணையத்தில் வெளியாகியுள்ளது.இது குறித்த விவரம் வருமாறு.

மெக்சிகோவில் ஹோட்டல் ஒன்றிற்கு வெளியே சோனியா (22) என்கிற பெண்ணுக்கும், அவனுடைய 29 வயது காதலன் எரிக்கிற்கும் இடையே கடும் வாக்குவாதம் நடந்துகொண்டிருந்துள்ளது. அப்போது திடீரென வயிற்றில் ரத்தத்துடன் எரிக் தரையில் சரிந்து விழுந்தார். அவரை கட்டிப்பிடித்து முத்தமிட்டபடியே, இறந்துவிடாதே என சோனியா கெஞ்சுகிறார்.

இந்த சம்பவத்தை வீடியோ எடுத்துக்கொண்டிருந்த நபர், என்ன நடந்தது என கேட்கும்பொழுது, “அவன் என்னை அடித்தான், என்னை கொலை செய்ய முயற்சித்தான்,” என கூறினார். உடனே எரிக் திரும்பி, “உண்மையை சொல்லு, அவள் என்னை கொலை செய்ய விரும்புகிறாள்” என சொல்லியிருக்கிறார். அழுதுகொண்டிருந்த அந்த பெண், நான் உன்னை கொலை செய்ய முயற்சிக்கவில்லை. ஏனெனில் நான் உன்னை காதலிக்கிறேன். நான் ஒரு போதும் அப்படி செய்ய மாட்டேன். ஆனால் நீ எனக்கு என்ன செய்தாய் என்பதை மறந்துவிட்டாய் என கூறினார். உடனே காயங்களுடன் கிடந்த எரிக், “கடவுள் தான் இதற்கு சாட்சி” என சொல்லி கொண்டிருந்தார். அதற்குள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ஆம்புலன்ஸ் ஊழியர்கள் அவரை உடனடியாக மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

இப்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் எரிக் அபாய கட்டத்தை கடந்து விட்டதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர் . இதனிடையே சோனியாவை கைது செய்த போலீசார் விசாரணை நடத்திக் கொண்டு வருகிறார்கள் .

You might also like

Leave A Reply

Your email address will not be published.