மூன்று பிரைமரி கேமரா, 32 எம்.பி. செல்ஃபி கேமராவுடன் ஹூவாய் நிறுவனத்தின் ஸ்மார்ட்போன் அறிமுகம்

0

ஹூவாய் நிறுவனம் புதிய மிட் ரேஞ் ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்துள்ளது. ஹூவாய் நோவா 4இ என அழைக்கப்படும் புதிய ஸ்மார்ட்போனில் 6.15 இன்ச் ஃபுல் ஹெச்.டி. பிளஸ் வாட்டர் டிராப் நாட்ச் டிஸ்ப்ளே, கிரின் 710 பிராசஸர், அதிகபட்சம் 6 ஜி.பி. ரேம், ஜி.பி.யு. டர்போ 2.0, ஆண்ட்ராய்டு 9.0 பை மற்றும் EMUI 9.0 வசதியும் வழங்கப்பட்டுள்ளது.

புகைப்படங்களை எடுக்க 24 எம்.பி. பிரைமரி கேமரா, 2 எம்.பி. இரண்டாவது பிரைமரி கேமரா, 8 எம்.பி. அல்ட்ரா வைடு-ஆங்கிள் லென்ஸ் வழங்கப்பட்டுள்ளது. செல்ஃபிக்களுக்கு 32 எம்.பி. கேமரா மற்றும் ஏ.ஐ. பியூட்டிஃபை அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளன. இதன் புளு வெர்ஷனில் கிளாஸ் பேக், கிரேடியன்ட் ஃபினிஷ் கொண்டிருக்கிறது.

இத்துடன் ஸ்மார்ட்போனின் பின்புறம் கைரேகை சென்சார் வசதியும், ஹைப்ரிட் டூயல் சிம் ஸ்லாட், டூயல் 4ஜி வோல்ட்இ, 3340 எம்.ஏ.ஹெச். பேட்டரி வழங்கப்பட்டுள்ளது. 18 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி, யு.எஸ்.பி. டைப்-சி வழங்கப்பட்டுள்ளது.

ஹூவாய் நோவா 4இ சிறப்பம்சங்கள்:

– 6.15 இன்ச் 2312×1080 பிக்சல் ஃபுல் ஹெச்.டி. பிளஸ் 19:5:9 2.5D வளைந்த கிளாஸ் டிஸ்ப்ளே
– ஆக்டா-கோர் 710 12 என்.எம். பிராசஸர்
– ARM மாலி-G51 MP4 GPU
– 4 ஜி.பி. / 6 ஜி.பி. ரேம்
– 128 ஜி.பி. மெமரி
– மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
– ஆண்ட்ராய்டு 9.0 பை மற்றும் EMUI 9.0
– ஹைப்ரிட் டூயல் சிம்
– 24 எம்.பி. பிரைமரி கேமரா, எல்.இ.டி. ஃபிளாஷ், f/1.8
– 2 எம்.பி. இரண்டாவது பிரைமரி கேமரா
– 8 எம்.பி. 120° அல்ட்ரா-வைடு கேமரா
– 32 எம்.பி. செல்ஃபி கேமரா, f/2.0
– கைரேகை சென்சார்
– டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத், யு.எஸ்.பி. டைப்-சி
– 3340 எம்.ஏ.ஹெச். பேட்டரி
– ஃபாஸ்ட் சார்ஜிங்

ஹூவாய் நோவா 4இ ஸ்மார்ட்போன் மிட்நைட் பிளாக், பியல் வைட் மற்றும் கிரேடியண்ட் புளு உள்ளிட்ட நிறங்களில் கிடைக்கிறது. இதன் 4 ஜி.பி. ரேம் வெர்ஷன் விலை 1999 யுவான் (இந்திய மதிப்பில் ரூ.20,720) என்றும் 6 ஜி.பி. ரேம் வெர்ஷன் 2299 யுவான் (இந்திய மதிப்பில் ரூ.23,835) என அந்நிறுவனம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.