பெங்களூரு ரவுடி கொலையில் தொடர்புடைய மேலும் ஒரு வாலிபர் கைது

0

தேன்கனிக்கோட்டை:

கர்நாடக மாநிலம், பெங்களூரு அருகே உள்ள மங்கமனப்பான்யா பகுதியைச் சேர்ந்தவர் இஸ்மாயில் (வயது 38). ரவடியான இவர் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்தார். இந்த நிலையில் இஸ்மாயில் கடந்த 12-ந் தேதி கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டையில் உள்ள தனது நண்பர் வீட்டிற்கு தனது காரில் வந்தார்.

அப்போது அவரை 7 பேர் கொண்ட கும்பலைச் சேர்ந்தவர்கள் பின் தொடர்ந்து வந்தனர். பின்னர் அவர்கள் மறைத்து வைத்திருந்த வீச்சரிவாள்களால் இஸ்மாயிலை சரமாரியாக வெட்டினர். இதில் அவர் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து இறந்தார். இதையடுத்து அவரை கொலை செய்த கும்பலை சேர்ந்தவர்கள் தப்பி சென்றனர்.

இந்த கொலை சம்பவம் குறித்து தகவலறிந்த தேன் கனிக்கோட்டை போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர். தப்பி ஓடிய கொலையாளிகளை பிடிக்க தனிப்படை அமைத்து தேடிவந்தனர். நேற்று பெங்களூர் மற்றும் தேனிகனிக்கோட்டை ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 6 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினர். அவர்கள் இஸ்மாயில் ரியல் எஸ்டேட் தொழில் போட்டி காரணமாக கொலை செய்ததாக தெரியவந்தது. இந்த சம்பவம் தொடர்பாக நேற்று இரவு மேலும் ஒரு வாலிபரை போலீசார் மடக்கி பிடித்து கைது செய்தனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.