பெங்களூரு சிறையில் சசிகலாவை சந்தித்து பேசிய தினகரன்

0

பெங்களூரு:

தமிழகத்தில் பாராளுமன்றத் தேர்தல் மற்றும் சட்டமன்ற இடைதேர்தலில் பிரதான கட்சிகளான அதிமுக, திமுக ஆகிய கட்சிகள் கூட்டணி அமைத்து போட்டியிடுகின்றன. டிடிவி தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் தனித்து போட்டியிட முடிவு செய்துள்ளது.

இந்நிலையில், டிடிவி தினகரன் இன்று பெங்களூரு சிறையில் உள்ள சசிகலாவை சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின்போது, அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் தனித்து போட்டியிடுவது குறித்தும், வேட்பாளர்கள் விவரம் குறித்தும் அவரிடம் ஆலோசனை நடத்தியிருக்கலாம் என தெரிகிறது.

இந்த சந்திப்பைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த டிடிவி தினகரன், வரும் பாராளுமன்ற தேர்தலுக்கு பின் மாபெரும் மாற்றம் வரும் என்றும், அப்போது பொள்ளாச்சி விவகாரம் குறித்த உண்மைகள் வெளிவரும் என்றும் அவர் கூறினார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.