நீண்ட நாள் பேட்டரி பேக்கப் வழங்கும் ஹூவாய் நிறுவனத்தின் ஃபிட்னஸ் பேண்ட் இந்தியாவில் அறிமுகம்

0

ஹுவாய் நிறுவனம் வாட்ச் ஜி.டி. ஸ்மார்ட்வாட்ச் மாடலுடன் இரண்டு புதிய ஃபிட்னஸ் டிராக்கிங் சாதனங்களை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. ஹூவாய் பேண்ட் 3 மற்றும் ஹூவாய் பேண்ட் 3இ என இவை அழைக்கப்படுகின்றன.

ஹூவாய் பேண்ட் 3 மாடலில் 0.95 இன்ச் AMOLED தொடுதிரை வசதி கொண்ட டிஸ்ப்ளே, 2.5D வளைந்த கிளாஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் மெட்டல் ஃபிரேம் ஒன்று டிஸ்ப்ளேவை சுற்றி பொருத்தப்பட்டுள்ளது. இதனை சிலிகான் ஸ்டிராப் கொண்டு அணிந்து கொள்ளளலாம்.

இந்த பேண்ட் அப்லோ 3 சிப் மூலம் இயங்குகிறது. இதில் ட்ரூஸ்லீப் 2.0 தொழில்நுட்பம் வழங்கப்பட்டுள்ளது. இது உறக்கத்தை கண்கானிப்பதோடு, இதனுடன் வழங்கப்பட்டிருக்கும் ஐ.ஆர். எனும் சென்சார் இதயதுடிப்பை டிராக் செய்யும். இந்த பேண்ட் அழைப்புகளுக்கான நோட்டிஃபிகேஷன்களை வசதியும் செய்யப்பட்டுள்ளது. 25 கிராம் எடை கொண்டிருக்கும் ஹூவாய் பேண்ட் 3 வாட்டர் ரெசிஸ்டண்ட் வசதி கொண்டிருக்கிறது.

ஹூவாய் பேண்ட் 3இ அனைவரும் வாங்கக்கூடிய விலையில் கிடைக்கிறது. இதில் புதிதாக ஃபுட்வியர் மோட் வழங்கப்பட்டுள்ளது. இது ஒட்டப்பயிற்சியின் போது 97 சதவிகிதம் வரை சரியான விவரங்களை வழங்குகிறது. இதற்கென 6-ஆக்சிஸ் கைரோஸ்கோப் சென்சார் வழங்கப்பட்டுள்ளது. இதிலும் வாட்டர் ரெசிஸ்டண்ட் வசதியும் செய்யப்பட்டுள்ளது.

ஹூவாய் பேண்ட் 3இ ஒருமுறை சார்ஜ் செய்தால் 14 நாட்களுக்கும், ஸ்டான்ட்பை மோடில் 21 நாட்களுக்கு பேக்கப் வழங்கும் என ஹூவாய் தெரிவித்துள்ளது. இந்த சாதனம் ஆண்ட்ராய்டு 4.4 மற்றும் அதன் பின் வெளியான இயங்குதளங்களிலும், ஐ.ஓ.எஸ். 9.0 மற்றும் அதன்பின் வெளியான பதிப்புகளை கொண்ட சாதனங்களில் சப்போர்ட் செய்யும்.

இந்தியாவில் ஹூவாய் பேண்ட் 3 விலை ரூ.4,699 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. மார்ச் 26 ஆம் தேதி முதல் அமேசான் தளத்தில் ஹூவாய் பேண்ட் 3 கிடைக்கிறது. இது அப்சிடியன் பிளாக் மற்றும் ஸ்பேஸ் புளு என இருவித நிறங்களில் கிடைக்கிறது. ஹூவாய் பேண்ட் 3இ மாடலின் விலை ரூ.1,699 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இது பின்க் மற்றும் புளு என இருவித நிறங்களில் கிடைக்கிறது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.