தேன்கனிக்கோட்டை அருகே வனப்பகுதிக்கு தீ வைத்த 2 பேர் கைது- போலீசார் விசாரணை

0

தேன்கனிக்கோட்டை :

கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அருகே உள்ள அய்யூர் வனப்பகுதியில் நேற்று வனவர்கள் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அந்த பகுதியில் திடீரென்று தீப்பற்றி எரிந்தது. இந்த தீ அருகில் இருந்த காய்ந்த செடிகள், மரம் போன்றவற்றில் பரவ தொடங்கியது.

உடனே வனத்துறையினர் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். வனத்துறையினர் வருவதை கண்டு மர்ம நபர்கள் 2 பேர் தப்பி ஓடினர். அவர்களை உடனே வனத்துறையினர் சுற்றி வளைத்து பிடித்து விசாரணை நடத்தினர். மேலும் அவர்களை பிடித்து கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி ஓசூர் கிளை சிறையில் அடைத்தனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.