சாம்பியன்ஸ் லீக் கால்பந்து போட்டியில் ரொனால்டோ ‘ஹாட்ரிக்’ கோல் அடித்து அசத்தல்

0

துரின்:

கிளப் அணிகளுக்கான ஐரோப்பிய சாம்பியன்ஷிப் லீக் கால்பந்து போட்டி பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் யுவென்டஸ் (இத்தாலி) அட்லெடிகோ மாட்ரிட் (ஸ்பெயின்) அணிகள் இடையிலான 2-வது சுற்றின் முதலாவது போட்டியில் அட்லெடிகோ மாட்ரிட் அணி 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றிருந்தது. இந்த நிலையில் இவ்விரு அணிகள் இடையிலான 2-வது போட்டி இத்தாலியின் துரின் நகரில் நடந்தது. குறைந்தது 3 கோல்கள் வித்தியாசத்தில் வெற்றி என்ற நெருக்கடியுடன் களம் இறங்கிய யுவென்டஸ் அணியில் நட்சத்திர வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ ஹாட்ரிக் கோல் அடித்து அசத்தினார்.

27-வது மற்றும் 48-வது நிமிடங்களில் தலையால் முட்டி கோல் போட்ட அவர் 86-வது நிமிடத்தில் கிடைத்த பெனால்டி வாய்ப்பையும் கோலாக மாற்றினார். முடிவில் யுவென்டஸ் அணி 3-0 என்ற கோல் கணக்கில் அட்லெடிகோ மாட்ரிட்டை தோற்கடித்தது. இரண்டு போட்டியின் முடிவின் அடிப்படையில் 3-2 என்ற கோல் வித்தியாசத்தில் யுவென்டஸ் அணி கால்இறுதிக்கு முன்னேறியது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.