கூகுள் ஆண்ட்ராய்டு இங்குதளத்தின் புதிய பதிப்பு பீட்டா வெர்ஷன் வெளியீடு

0

கூகுள் நிறுவனம் ஆண்ட்ராய்டு கியூ பீட்டா பதிப்பை வெளியிட்டுள்ளது. வழக்கமாக கூகுள் I/O நிகழ்வில் புதிய ஆண்ட்ராய்டு வெர்ஷன் அறிமுகம் செய்வதை கூகுள் வழக்கமாக கொண்டிருக்கிறது.

இதே வழக்கத்தை கூகுள் இம்முறையும் பின்பற்றலாம் என தெரிகிறது. புதிய இயங்குதளத்தில் கூடுதலாக தனியுரிமை மற்றும் பாதுகாப்பு அம்சங்களை வழங்க இருப்பதாக கூகுள் தெரிவித்திருக்கிறது. இத்துடன் மடிக்கக்கூடிய சாதனங்களுக்கென மேம்படுத்துப்பட்டு இருக்கும் என தெரிகிறது.

மேலும் புகைப்படங்களில் டைனமிக் டெப்த் வசதி, கனெக்டிவிட்டிக்கென புதிய ஏ.பி.ஐ.க்கள், புதிய மீடியா கோடெக்கள் மற்றும் கேமரா வசதிகள், வல்கன் 1.1 சப்போர்ட், வேகமான ஆப் ஸ்டார்ட்அப் போன்ற அம்சங்கள் புதிய இயங்குதளத்தில் சேர்க்கப்படுகின்றன.

எனினும், டார்க் மோட் வசதியை ஏ.டி.பி. மூலம் செயல்படுத்திக் கொள்ள முடியும். இது ஆண்ட்ராய்டு பை இயங்குதளத்தில் சிலருக்கு மட்டும் தானாக செயல்படுத்தப்பட்டிருக்கிறது. ஆண்ட்ராய்டு கியூ இயங்குதளத்தின் பேட்டரி சேவர் மோட் சில சிஸ்டம் ஆப்களை டார்க் மோடில் வைக்கிறது.

தற்சமயம் ஆண்ட்ராய்டு கியூ இயங்குதளம் பிக்சல், பிக்சல் XL, பிக்சல் 2, பிக்சல் 2 XL, பிக்சல் 3 மற்றும் பிக்சல் 3 XL உள்ளிட்ட சாதனங்களில் வழங்கப்படுகிறது. புதிய இயங்குதள வெர்ஷனை ஆண்ட்ராய்டு டெவலப்பர் வலைதளம் சென்று OTA முறையில் அப்டேட் செய்து கொள்ளலாம்.

ஆண்ட்ராய்டு கியூ பொது பயனர்களுக்கான இறுதி வெர்ஷன் 2019 ஆண்டின் மூன்றாவது காலாண்டு இறுதியில் வெளியிடப்படும் என தெரிகிறது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.