காரிமங்கலம் அருகே வாலிபர் மர்மமான முறையில் பலி- போலீசார் விசாரணை

0

காரிமங்கலம்:

தருமபுரி மாவட்டம், காரிமங்கலம் அடுத்துள்ள புதூர் பகுதியை சேர்ந்தவர் முருகேசன். இவரது மகன் கோவிந்தராஜ் (வயது30). கார்மெண்ட்ஸ் நடத்தி வந்த இவருக்கு கலையரசி என்ற மனைவி உள்ளார். கோவிந்தராஜ் குடும்பத்துடன் அதே கிராமத்தில் தனியாக வீடு எடுத்து வசித்து வந்தார்.

இந்த நிலையில் நேற்று மாலை கோவிந்தராஜ் தனது தந்தை வீட்டில் தூக்குபோட்டு தற்கொலை செய்தார். இதனை பார்த்த குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்தனர். இது குறித்து காரிமங்கலம் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் தற்கொலை செய்த கோவிந்தராஜ் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தருமபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.