கடத்தூர் அருகே ஆசிரியர்கள் வீட்டின் பூட்டை உடைத்து நகை கொள்ளை

0

கடத்தூர்:

தர்மபுரி மாவட்டம், கடத்தூர் அருகே உள்ள ஒடசல்பட்டியைச் சேர்ந்தவர் ராமச்சந்திரன் (வயது49). ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி ஜெயமணி ஆசிரியை ஆவர். இருவரும் வெவ்வேறு இடங்களில் ஆசிரியர்களாக பணியாற்றி வருகின்றனர். இருவரும் வேலைக்கு சென்ற நிலையில் அவர்களது மாமியார் ராஜேஸ்வரி, மாமனார் சுப்பிரமணி இருவரும் வீட்டை பூட்டிவிட்டு அருகில் இருந்த உறவினர்களின் வீட்டுக்கு சென்றுள்ளனர்.

பின்னர், வெளியே சென்றவர்கள் வீட்டுக்கு திரும்பி வந்து பார்த்தபோது வீட்டு கதவின் பூட்டு உடைக்கப்பட்ட நிலையில் கிடந்துள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர்கள் உள்ளே சென்று பார்த்தபோது வீட்டில் வைக்கப்பட்டிருந்த சுமார் 17 பவுன் நகைகள் கொள்ளை போனது தெரியவந்தது. இது குறித்து கடத்தூர் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின்பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.