எங்கள் மண்ணில் இந்தியா சிறப்பாக விளையாடியது, நாங்கள் இந்தியாவில் சிறப்பாக விளையாடினோம் – ஜஸ்டின் லாங்கர்

0

இந்தியா – ஆஸ்திரேலியா இடையில் 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் நடைபெற்றது. இதில் ஆஸ்திரேலியா 3-2 எனத் தொடரை கைப்பற்றியது.

இந்தியாவிற்கு எதிராக தொடரை கைப்பற்றிய ஆஸ்திரேலிய அணியின் தலைமை பயிற்சியாளர் ஜஸ்டின் லாங்கர் கூறுகையில், “எல்லா புகழும் ஆஸ்திரேலிய வீரர்களைச் சேரும். நாங்கள் ஒரு போட்டிக்கு எப்படி தயாராகுவோமோ அதேபோல்தான் தயாராகினோம். ஆனால் எங்கள் வீரர்கள் முக்கியமான சூழ்நிலையில் சிறப்பாக விளையாடினார்கள்.

வீரர்களின் செயல்பாடு வியக்கத்தக்க பெருமை அளிக்கிறது. இந்திய அணி ஆஸ்திரேலியா வந்ததில் இருந்து எங்கள் அணி நம்ப முடியாத வளர்ச்சி அடைந்துள்ளது.

விராட் கோலியை போன்ற வீரரை நான் பார்த்ததே இல்லை. இந்திய அணி சிறப்பான வகையில் போட்டியிடும் உத்வேகத்தை வெளிப்படுத்தினார்கள். ஆஸ்திரேலியா மண்ணில் இந்தியா சிறப்பாக செயல்பட்டது. அதேபோல் இந்திய மண்ணில் ஆஸ்திரேலியா சிறப்பாக செயல்பட்டது” என்றார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.