உலகக்கோப்பையை இங்கிலாந்துக்கு வெல்ல வாய்ப்பு இருக்கிறது – கவாஸ்கர்

0

உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி மே மாதம் 3-ந்தேதி முதல் ஜூலை 14-ந்தேதி வரை இங்கிலாந்தில் நடக்கிறது.

இது தொடர்பாக கவாஸ்கர் கூறியதாவது:-

2011-ம் ஆண்டு உலக கோப்பையை இந்தியா நடத்தி கோப்பையை வென்றது. 2015-ம் ஆண்டு உலக கோப்பையை ஆஸ்திரேலியா நடத்தி பட்டம் வென்றது. 2019-ம் ஆண்டு உலகக்கோப்பை போட்டியை இங்கிலாந்து நடத்துகிறது. அந்த அணி உலகக்கோப்பையை வெல்ல நல்ல வாய்ப்பு இருக்கிறது. மேலும் இங்கிலாந்து அணி தற்போது சிறப்பான விளையாட்டை வெளிப்படுத்தி வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

உலகக்கோப்பையை ஆஸ்திரேலியா அதிகபட்சமாக 5 முறை (1987, 1999, 2003, 2007, 2015 ஆகிய ஆண்டுகளில்) வென்றுள்ளது. இந்தியா (1983, 2011), வெஸ்ட் இண்டீஸ் (1975, 1979) அணிகள் தலா 2 முறையும், பாகிஸ்தான் (1992), இலங்கை (1996) அணிகள் தலா ஒருமுறையும் உலகக்கோப்பையை கைப்பற்றி உள்ளன.

You might also like

Leave A Reply

Your email address will not be published.