உலகக்கோப்பைக்கான அணியை தேர்வு செய்து விட்டோம் – விராட் கோலி

0

இந்த தோல்வி குறித்து இந்திய அணி கேப்டன் விராட் கோலி கூறியதாவது:-

273 ரன் எடுக்கக்கூடிய இலக்குதான். கடைசி நேரத்தில் அவர்கள் எங்களை விட கொஞ்சம் சிறப்பாக செயல்பட்டனர். 14 முதல் 20 ரன்கள் வரை கூடுதலாக கொடுத்து விட்டோம். இக்கட்டான நேரத்தில் அவர்கள் துணிச்சலான முடிவை எடுத்தார்கள். இந்த வெற்றிக்கு ஆஸ்திரேலியா அணிக்கு தகுதியானது.

இந்த தொடரை நாங்கள் இழந்ததற்கு எந்த காரணமும் முன்வைக்க முடியாது. பல மாதங்களாக விளையாடி கொண்டு இருக்கிறோம் என்பதில் பெருமைப்படுகிறேன். ஆஸ்திரேலிய தொடரில் வீரர்கள் செய்த தவறுகள் உலகக்கோப்பையில் எதிரொலிக்காது.

உலகக்கோப்பை போட்டிக்கான 11 பேர் கொண்ட அணி வீரர்களை முடிவு செய்து விட்டோம். யார் எந்த வரிசையில் ஆடுவது என்பது பற்றி தீர்மானிக்கப்பட்டு விட்டது. ஆட்டத்தின் தன்மைக்கு ஏற்றவாறு ஒரு மாற்றம் செய்யப்படும். ஹர்த்தி பாண்ட்யா மீண்டும் அணிக்கு திரும்புவார். ஒரு இடத்துக்கு மட்டுமே விவாதிக்கப்படுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.