ஆசிய கோப்பை கிளப் கால்பந்து போட்டியில் பிரதான குரூப் சுற்றுக்கு சென்னை அணி தகுதி

0

ஆமதாபாத்:

ஆசிய கோப்பை கிளப் கால்பந்து போட்டிக்கான தென்மண்டல பிளே-ஆப் தகுதி சுற்றின் 2-வது போட்டியில் சென்னையின் எப்.சி. (இந்தியா)-கொழும்பு எப்.சி. (இலங்கை) அணிகள் ஆமதாபாத்தில் நேற்று பலப்பரீச்சை நடத்தின. விறுவிறுப்பான நடந்தஇந்த போட்டியில் சென்னையின் எப்.சி. அணி 1-0 என்ற கோல் கணக்கில் கொழும்பு எப்.சி.யை தோற்கடித்தது. வெற்றிக்குரிய கோலை ஜெஜெ லால்பெகுலா 68-வது நிமிடத்தில் அடித்தார்.

ஏற்கனவே இவ்விரு அணிகள் இடையிலான முதலாவது சுற்று கோல் இன்றி டிரா ஆனது. இரு போட்டிகளின் முடிவின் அடிப்படையில் 1-0 என்ற கோல் கணக்கில் முன்னிலையுடன் சென்னையின் எப்.சி. அணி, ஆசிய கோப்பை போட்டியின் பிரதான குரூப் சுற்றுக்கு தகுதி பெற்றது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.