Tamil Nadu – Dinaseithigal

சின்னசேலம் அருகே மூதாட்டி மாயம்

கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் பகுதியை சேர்ந்த ரமேஷ். இவர் சென்னையில் உள்ள தனியார் கம்பெனியில் வேலை பார்த்து வருகிறார். இவருடைய தாய் ஜோதி என்கின்ற பழனியம்மாள் (67), தந்தை இருவரும் மேலூரில் வசித்து வருகின்றனர். இந்நிலையில் ரமேசின் தாய் பழனியம்மாள் மூதாட்டி மாயமானார். இவர் கடந்த 30 வருடங்க ளாக மனநலம் பாதிக்கப்பட்டு வாழ்ந்து வந்ததாக கூறப்படுகின்றது. இதுகுறித்து ரமேஷ் அளித்த புகாரின் போலீசார் வழக்கு பதிவு செய்து மனநலம் பாதிக்கப்பட்ட மூதாட்டியை போலீசார் தேடி வருகின்றனர்.

Read More

சத்தியமங்கலம் அருகே வழுக்கி விழுந்து அரசு பஸ் கண்டக்டர் பலி

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் பகுதியை சேர்ந்தவர் லட்சுமிகாந்தன் (56). அரசு போக்குவரத்து கழகத்தில் கண்டக்டராக பணியாற்றி வந்தார். இவரது மனைவி புவனேஸ்வரி. இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். லட்சுமிகாந்தனுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டதையடுத்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று அதன்பின் வீட்டில் ஓய்வெடுத்து வந்தார். சம்பவத்தன்று அதிகாலை 5 மணியளவில் குளியலறைக்கு சென்ற லட்சுமிகாந்தன் வெகு நேரமாகியும் வெளியே வரவில்லை. இதையடுத்து அவரது மனைவி புவனேஸ்வரி குளியலறைக்கு சென்று பார்த்தபோது அங்கு மயக்க நிலையில் கீழே விழுந்து கிடந்துள்ளார். அவரை சத்தியமங்கலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு …

Read More

சாணார்பட்டி அருகே லாட்டரி சீட்டு விற்றவர் கைது

சாணார்பட்டி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஜான்சன் ஜெயக்குமார் தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். நொச்சிஓடைப்பட்டியில் வெளிமாநில லாட்டரி சீட்டுகளை விற்பனைக்கு வைத்திருந்த வெள்ளைச்சாமி(75) என்பவரை கைது செய்து அவரிடமிருந்த 68 லாட்டரி சீட்டுகள் மற்றும் ரூ.1300-ஐ பறிமுதல் செய்தனர்.

Read More

சாணார்பட்டி அருகே சூதாடிய கும்பல் கைது

சாணார்பட்டி போலீசார் அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். நெச்சிஓடைப்பட்டி நாடகமேடை அருகே பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்ட சுப்பிரமணி, சிவச்சந்திரன், பாலமுருகன், முனியாண்டி, முத்துக்குமரன் ஆகியோரை போலீசார் கைது செய்து அவர்களிடமிருந்த பணம் மற்றும் சீட்டு கட்டுகளை கைப்பற்றினர்.

Read More

கடலூரில் எல்.ஐ.சி. அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம்

கடலூர் மஞ்சக்குப்பம் எல்.ஐ.சி. அலுவலகம் முன்பு பல்வேறு கோரிக்கை வலியுறுத்தி எல் .ஐ.சி. நுகர்வோர் சங்கத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு சிவராஜ் தலைமை தாங்கினார்‌. மணிமாறன் வரவேற்றார். கோட்ட பொருளாளர் தாண்டவ கிருஷ்ணன் வாழ்த்துரை ஆற்றினார். இதில் நிர்வாகிகள் கிருஷ்ணமூர்த்தி செல்வராஜ் நெடுஞ்செழியன் ரமேஷ் ராஜசேகர் உட்பட பலர் கலந்து கொண்டனர் முடிவில் துணைத் தலைவர் பாலமுருகன் நன்றி கூறினார் முன்னதாக தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர்.

Read More

அரியலூரில் கிராம நிர்வாக அதிகாரிகள் ஆர்ப்பாட்டம்

அரியலூர் ஆட்சியர் அலுவலகம் எதிரே தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் முன்னேற்றச் சங்கத்தினர் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்துக்கு, அச்சங்கத்தின் மாவட்டத் தலைவர் சு.ராஜா தலைமை வகித்தார். செயலர் பாக்கியராஜ், மாநில பிரச்சார செயலர் அ.பொய்யாமொழி ஆகியோர் முன்னிலை வகித்தனற். மாநிலத் தலைவர் இரா.அழகிரிசாமி பங்கேற்று கண்டன உரையாற்றினார்.

Read More

ஆண்டிமடம் அருகே விபத்தில் 2 பேர் காயம்

அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் பகுதியை சேர்ந்தவர் குமார் (45). இவர் நேற்று பெரியகருக்கை அருகே மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டு இருந்தார். அப்போது மேலத்தெருவை சேர்ந்த ராமலிங்கம் (70) என்பவர் ஓட்டி சென்ற மோட்டார் சைக்கிள் எதிர்பாராதவிதமாக நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இதில் படுகாயம் அடைந்த 2 பேரையும் ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக குமார், தஞ்சை மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு அவருக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகிறார்கள். இதுகுறித்து ஆண்டிமடம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை …

Read More

தந்தையை அடித்து கொன்ற மகன் கைது

பழனி பகுதியை சேர்ந்தவர் ராமசாமி(80). இவரது மகன் ராமராஜ்(50). கூலித்தொழிலாளி. ராமசாமியால் எந்த வேலைக்கும் செல்ல முடியாது என்பதால் வீட்டிலேயே இருந்துள்ளார். இதனால் இவரது மகனிடம் செலவுக்கு பணம் கேட்டு வந்துள்ளார். நேற்று தனது மகனிடம் பணம் கேட்டார். அதற்கு ராமராஜ் பணம் தர மறுத்ததுடன் தகாத வார்த்தையால் திட்டினார். அப்போது அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த ராமராஜ் தனது தந்தையை அடித்து கீழே தள்ளினார். இதில் காயமடைந்த ராமசாமியை பழனி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் வரும் வழியிலேயே ராமசாமி பரிதாபமாக …

Read More

ஆர்.எஸ்.எஸ். ஊர்வலம் நடத்த அனுமதி மறுப்பு

தமிழகம் முழுவதும் 50 இடங்களில் அக்டோபர் 2-ந் தேதி ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்பு ஊர்வலத்துக்கு அனுமதி வழங்க உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம் பல்வேறு நிபந்தனைகளுடன் செப்டம்பர் 28-ந் தேதிக்குள் அனுமதி வழங்கும்படி போலீசாருக்கு உத்தரவிட்டிருந்தார். இதனிடையே விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், கம்யூனிஸ்டு கட்சிகள் மற்றும் திராவிடர் கழகம் சார்பில் சமூக நீதி பேரணி நடைபெறும் என்றும் தங்களுக்கு அக்டோபர் 2-ந் தேதி இந்த பேரணியை நடத்த அனுமதி அளிக்க வேண்டும் எனவும் அந்தந்த மாவட்ட எஸ்.பி. அலுவலகங்களில் …

Read More

தா.பழூர் அருகே கூழாங்கற்கள் கடத்திய லாரி பறிமுதல்

அரியலூர் மாவட்டம், தா.பழூர் பகுதியில் மாவட்ட புவியியல் மற்றும் சுரங்கத்துறை உதவி புவியியலாளர் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்கு வந்த டிப்பர் லாரியை வழிமறித்து சோதனை செய்தபோது, அரசு அனுமதி இல்லாமல் 2 யூனிட் கூழாங்கற்கள் கடத்தி வரப்பட்டது தெரியவந்தது. இதையடுத்து டிப்பர் லாரி டிரைவர் தப்பி ஓடிவிட்டார். இது குறித்து தா.பழூர் போலீசாருக்கு சுரங்கத்துறை அதிகாரி ராமஜெயம் தகவல் தெரிவித்தார். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Read More