Sports – Dinaseithigal

‘எனது பந்து வீச்சை எதிர்கொள்வது கடினம்’ – இந்திய பேட்ஸ்மேன்களுக்கு பாகிஸ்தான் பவுலர் எச்சரிக்கை

20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி தனது முதல் போட்டியில் பாகிஸ்தானுடன் மெல்போர்னில் வருகிற 23-ந்தேதி பலப்பரீட்சை நடத்த உள்ளது. இதுகுறித்து பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் ஹாரிஸ் ரவுப் அளித்த ஒரு பேட்டியில், ‘பாகிஸ்தான்- இந்தியா மோதல் எப்போதுமே உச்சகட்ட நெருக்கடி நிறைந்த போட்டியாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. நான் எனது சிறந்த திறனை வெளிப்படுத்தும் பட்சத்தில் எனது பந்துவீச்சை இந்திய பேட்ஸ்மேன்கள் சமாளிப்பது எளிதாக இருக்காது. இந்த ஆட்டம் மெல்போர்னில் நடப்பது மகிழ்ச்சியாக உள்ளது. ஏனெனில் பிக்பாஷ் கிரிக்கெட்டில் …

Read More

வாழ்த்து கூறிய விராட் கோலி – ரோஜர் பெடரர் அளித்த பதில் என்ன?

சர்வதேச டென்னிஸ் போட்டிகளில் அதிக கிராண்ட்ஸ்லாம் வென்ற வீரர்களில் ஒருவரான சுவிட்சர்லாந்தின் ரோஜர் பெடரர் அண்மையில் ஓய்வு முடிவை அறிவித்தார். அவருக்கு பல்வேறு நபர்கள் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர். இது தொடர்பாக ஏடிபி தன்னுடைய சமூக வலைதளப் பக்கங்களில் வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளது. அந்த வீடியோவில் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலி, ரோஜர் பெடரருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். அதில், நீங்கள் டென்னிஸ் விளையாடுவதை நேரடியாக பார்க்கும் வாய்ப்பு எனக்கு 2018-ம் ஆண்டு ஆஸ்திரேலியன் ஓபன் தொடரின்போது கிடைத்தது. டென்னிஸ் விளையாட்டில் நீங்கள் …

Read More

‘சீதோஷ்ண நிலைக்கு ஏற்ப பவுலிங் செய்வது முக்கியம்’ – இந்திய பவுலர் அர்ஷ்தீப்சிங்

தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதலாவது 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. தென்ஆப்பிரிக்காவை சீர்குலைத்த இந்திய இடக்கை வேகப்பந்து வீச்சாளர் அர்ஷ்தீப்சிங் 3 முன்னணி விக்கெட்டுகளை சாய்த்து மிரட்டினார். ஆட்டநாயகன் விருது பெற்ற 23 வயதான அர்ஷ்தீப்சிங் கூறுகையில், ‘ஆடுகளம் வேகப்பந்து வீச்சுக்கு அனுகூலமாக இருந்தது. இங்கு இந்த அளவுக்கு பந்து ‘ஸ்விங்’ ஆகும் என்று எதிர்பார்க்கவில்லை. சீதோஷ்ண நிலைக்கு ஏற்பவும், அணிக்கு என்ன தேவை என்பதற்கு தகுந்தபடியும் நம்மை மாற்றிக்கொண்டு பந்து வீசுவது மிகவும் …

Read More

ஷிகர் தவான் – ரிஸ்வான் சாதனையை முறியடித்த சூர்யகுமார் யாதவ்

இந்தியா – தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதிய முதல் டி20 கேரளாவின் திருவனந்தபுரத்தில் நடைபெற்றது. இதில் இந்திய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. சூர்யகுமார் யாதவ் மற்றும் கேஎல் ராகுல் அரை சதம் அடித்து அசத்தினர். டி20 கிரிக்கெட்டில் சூர்யகுமார் யாதவ் அறிமுகமானதில் இருந்து மற்ற இந்திய வீரர்களைக் காட்டிலும் அதிகபட்சமாக 6 ஆட்ட நாயகன் விருதுகளை வென்று உலகின் நம்பர் 2 பேட்ஸ்மேனாக முன்னேறியுள்ளார். மேலும் நேற்றைய போட்டியில் எடுத்த 50 ரன்களையும் சேர்த்து இந்த வருடம் 732 ரன்களை …

Read More

டி20 உலக கோப்பை போட்டியில் இருந்து ஜஸ்பிரித் பும்ரா விலகல்

இந்திய அணி வீரர் ஜஸ்பிரித் பும்ரா காயம் காரணமாக டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டியிலிருந்து விலகியதாக தகவல் வெளியாகி உள்ளது. முதுகில் ஏற்பட்ட காயம் காரணமாக 4 முதல் 6 மாதங்கள் வரை பும்ரா விளையாட முடியாது என தகவல் வெளியாகி உள்ளது. அக்டோபர் 6ம் தேதியன்று டி20 உலகக்கோப்பை தொடருக்காக இந்திய அணி ஆஸ்திரேலியா புறப்படுகிறது. இந்த சமயத்தில் பும்ரா டி20 உலககோப்பையில் பங்கேற்பாரா என ரசிகர்கள் மத்தியில் கேள்வி எழுந்தது. இந்த நிலையில், டி20 உலகக்கோப்பை தொடரில் இருந்து காயம் …

Read More

பவர்பிளேயில் ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்தியதே வெற்றிக்கு காரணம் – ரோகித் சர்மா

கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் நேற்று நடைபெற்ற தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான முதல் டி20 தொடரில் இந்திய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றி குறித்து கேப்டன் ரோகித் சர்மா கூறியுள்ளதாவது: தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டி20 போட்டியில், ஆரம்பம் முதலே வேகப்பந்து வீச்சாளர் அர்ஷ்தீப் சிங் மற்றும் தீபக் சாகர் விக்கெட்களை எடுக்க ஆரம்பித்து விட்டனர். பவர்பிளேயின் போது ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்தியது இந்திய அணிக்கு சாதகமாக மாற்றியது. விக்கெட் கடினமாக இருந்தது. ஆடுகளம் 20 ஓவர்களுக்கும் …

Read More

தேசிய விளையாட்டு விருது – விண்ணப்பிக்க கடைசி தேதி நீட்டிப்பு

மத்திய இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுக்கள் அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில்:- மேஜர் தியான் சந்த் கேல் ரத்னா விருது, அர்ஜூனா விருது, துரோணாச்சார்யா விருது, தியான் சந்த் விருது, தேசிய விளையாட்டு ஊக்குவிப்பு விருது மற்றும் நடப்பாண்டிற்கான மௌலானா அபுல் கலாம் ஆசாத் கோப்பை ஆகியவற்றுக்கு மத்திய இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுக்கள் அமைச்சகம் விண்ணப்பங்களை வரவேற்று அறிவிப்பை வெளியிட்டது. ஆகஸ்ட் 27 அன்று இதற்கான அறிவிப்பு அமைச்சகத்தின் www.yas.nic.in என்ற இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டது. இந்த விண்ணப்பங்களை அனுப்புவதற்கான கடைசி தேதி செப்டம்பர் …

Read More

5-வது டி20 தொடர் – இங்கிலாந்தை வீழ்த்தி பாகிஸ்தான் வெற்றி

பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் செய்து வரும் இங்கிலாந்து அணி 7 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதுவரை 4 போட்டிகள் நடந்து முடிந்திருந்த. இதில் இரு அணிகளும் தலா 2 வெற்றிகள் பெற்றன. இரு அணிகள் இடையிலான 5வது டி-20 போட்டி லாகூரில் நேற்று நடைபெற்றது. இதில் முதலில் களமிறங்கிய பாகிஸ்தான் அணி 19 ஒவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 145 ரன்கள் எடுத்தது. அந்த அணியில் அதிகபட்சமாக முகமது ரிஸ்வான் 46 பந்துகளில் 63 ரன்கள் எடுத்தார். இங்கிலாந்து வீரர் மார்க் …

Read More

முதல் டி20 கிரிக்கெட் தொடர் – தென் ஆப்பிரிக்காவை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது இந்தியா

இந்தியா-தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணிகள் இடையிலான முதல்வர் 20 ஓவர் போட்டி திருவனந்தபுரத்தில் உள்ள கிரீன்பீல்டு சர்வதேச ஸ்டேடியத்தில் நடைபெற்றது. இதில் முதலில் பேட்டிங் செய்த தென் ஆப்பிரிக்க அணி, இந்திய பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டை பறிகொடுத்தது. 20 ஓவர் முடிவில 8 விக்கெட் இழப்பிற்கு 106 ரன்கள் சேர்த்தது. அதிகபட்சமாக கேசவ் மகராஜ் 41 ரன்கள் சேர்த்தார். இந்தியா தரப்பில் அர்ஷ்தீப் சிங் 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார். தீபக் சாகர், ஹர்ஷல் பட்டேல் தலா 2 விக்கெட் எடுத்தனர். இதையடுத்து …

Read More

XI vs SA: விளையாடுவதில் தீபக் சாஹரை விட அர்ஷ்தீப்பை நான் விரும்புகிறேன் – ஜாஃபர்

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டி20 போட்டியில் தீபக் சாஹரை விட அர்ஷ்தீப் சிங்கை விளையாட விரும்புவதாக இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் வாசிம் ஜாஃபர் தெரிவித்துள்ளார். “ஏனென்றால், டெத் பந்துவீச்சு ஒரு கவலையாக இருந்தது. அர்ஷ்தீப் சேர்க்கப்பட்டதால், ஹர்ஷல் படேல் மீதான அழுத்தம் கொஞ்சம் குறையக்கூடும்” என்று ஜாஃபர் விளக்கினார். சமீபத்தில் முடிவடைந்த ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 தொடரில் அர்ஷ்தீப் பங்கேற்கவில்லை.

Read More