National – Dinaseithigal

காஷ்மீரில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக் கொலை

காஷ்மீரின் சோபியான் மாவட்டம் சித்ரகம் பகுதியிலும் பாரமுல்லா மாவட்டம் யெடிபுரா பகுதியிலும் பாதுகாப்பு படையினர் தேடுதல் வேட்டை நடத்திய போது அங்கு பதுங்கி இருந்த பயங்கரவாதிகள் திடீரென்று பாதுகாப்பு படையினர் மற்றும் போலீசார் மீது துப்பாக்கி சூடு நடத்தினார்கள். இதையடுத்து பாதுகாப்பு படையினர் அந்த பகுதியை சுற்றி வளைத்து பதிலுக்கு துப்பாக்கி சூடு நடத்தினார்கள். இந்த தாக்குதலில் 2 பயங்கரவாதிகளை பாதுகாப்பு படையினர் துப்பாக்கியால் சுட்டுக் கொன்றனர். சுட்டுக் கொல்லப்பட்ட 2 பயங்கரவாதிகளும் ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பை சேர்ந்தவர்கள் ஆவர்.

Read More

தனிநபர் கடன், வாகன கடன் வட்டி உயர வாய்ப்பு – ரிசர்வ் வங்கி ஆளுனர்

வங்கிகளுக்கான குறுகிய கால கடனுக்கான வட்டி விகிதத்தை ரிசர்வ் வங்கி 0.5 சதவீதம் உயர்த்தியுள்ளது. இதன் மூலம் ரிசர்வ் வங்கி, வங்கிகளுக்கு வழங்கும் கடன்களுக்கான வட்டி விகிதம் 5.4% இருந்து 5.9 % மாக அதிகரித்துள்ளது. இது குறித்து ரிசர்வ் வங்கி ஆளுனர் சக்தி காந்ததாஸ் செய்தியாளர்களிடம் கூறியதாவது, இந்திய பொருளாதாரம் தொடர்ந்து மீட்பு திறன் கொண்டதாக இருக்கிறது என்றார். உலக அளவிலான அரசியல் சூழல், நிதிச் சந்தையில் உள்ள நிச்சயமற்ற தன்மையால் பணவீக்கம் அதிகரித்துள்ளதாகவும், நாட்டின் பணவீணக்கம் தற்போது 7% ஆக உள்ளது.

Read More

இந்தியாவில் புதிதாக 3,947 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 3,947 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்று பாதிப்பு 4,272 ஆக இருந்த நிலையில் இன்று சற்று குறைந்துள்ளது. இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4 கோடியே 45 லட்சத்து 87 ஆயிரத்து 307 ஆக உயர்ந்தது. தொற்று பாதிப்பில் இருந்து நேற்று 5,096 பேர் நலம் பெற்றுள்ளனர். இதுவரை குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 4 கோடியே 40 லட்சத்து 19 ஆயிரத்து 95 ஆக அதிகரித்துள்ளது. சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை நேற்றை விட 1,167 குறைந்துள்ளது. …

Read More

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பிரம்மோற்சவ விழா – 3 லட்சம் பக்தர்கள் கருடசேவையை தரிசிக்கலாம்

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வருடாந்திர பிரம்மோற்சவ விழா பிரமாண்டமாக நடந்து வருகிறது. விழாவின் மிக முக்கியமான நிகழ்ச்சியாக கருடசேவை அடுத்த மாதம் (அக்டோபர்) 1-ந்தேதி இரவு 7 மணியளவில் தொடங்கி நடக்கிறது. அன்று வாகனச் சேவையைப் பார்க்க வரும் அனைத்துப் பக்தர்களுக்கும் வாகன தரிசனம் வழங்க திருமலை-திருப்பதி தேவஸ்தானம் விரிவான ஏற்பாடுகளை செய்துள்ளது. கோவிலின் நான்கு மாடவீதிகளில் நடக்கும் கருடசேவை அன்று பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது. கிட்டத்தட்ட மூன்று லட்சம் பக்தர்கள் கருடசேவையை தரிசிக்கலாம்.

Read More

5 ஜி சேவை… பிரதமர் மோடி நாளை தொடங்கி வைக்கிறார்

5 ஜி அலை கற்றை ஏலத்தை மத்திய அரசு சமீபத்தில் நடத்தியது. இதில் முன்னணி நிறுவனங்கள் பங்கேற்று ஏலம் எடுத்தது. நாட்டில் 5 ஜி சேவை விரைவில் அமல்படுத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது. இந்தநிலையில் நாளை காலை 10 மணிக்கு டெல்லியில் உள்ள பிரகதி மைதானத்தில் பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார்.

Read More

பெங்களூருவில் பணத்திற்கு பதிலாக கிரிப்டோ கரன்சி பெறும் டீக்கடை உரிமையாளர்

பெங்களூரு மாரத்தஹள்ளியை சேர்ந்தவர் சுபம் சாய்னா. இவர் அப்பகுதியில் டீக்கடை நடத்தி வருகிறார். அவரது கடைக்கு டீ குடிக்க வரும் வாடிக்கையாளர்களிடம் இருந்து பணம், சில்லறை நாணயம் வாங்குவது கிடையாது. அதற்கு மாற்றாக கிரிப்டோகரன்சி வாங்கி வருகிறார். இதற்காக அவர் தனது கடையில் ஒரு பதாகையில் கிரிப்டோகரன்சி வாங்கப்படும் என்றும், கிரிப்டோ மதிப்பில் இந்திய ரூபாய் மதிப்பீட்டை குறித்து வைத்துள்ளார். இதுதொடர்பான புகைப்படத்தை தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டார். இது சமூக வலைத்தளத்தில் பெரிதும் விவாதிக்கப்படும் பொருளாக மாறிஉள்ளது. இந்த புகைப்படத்தை பார்த்த சிலர், …

Read More

63 ஆபாச இணைய தளங்களை முடக்க உத்தரவு – மத்திய அரசு

இணையதள சேவை வழங்குபவர்களுக்கு அனுப்பிய மின்னஞ்சலில், 63 ஆபாச இணைய தளங்களை புனே ஐகோர்ட்டின் உத்தரவின் அடிப்படையில் முடக்குமாறு மத்திய தொலைத்தொடர்புத் துறை கேட்டுக் கொண்டுள்ளது. மேலும், உத்தரகாண்ட் ஐகோர்ட்டின் உத்தரவு மற்றும் மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் வழங்கிய உத்தரவுகளின் அடிப்படையில் 4 இணைய தளங்களை முடக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

Read More

தமிழ்நாடு வரும் வெளிநாட்டினரை தாக்க சதி திட்டம் – என்.ஐ.ஏ. விசாரணையில் திடுக்கிடும் தகவல்

ஐ.எஸ். போன்ற சர்வதேச பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்பில் இருப்பதாகக்கூறி, ‘பி.எப்.ஐ.’ என்று அழைக்கப்படுகிற ‘பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா’ அமைப்பை மத்திய அரசு அதிரடியாக தடை செய்தது. ஏற்கனவே இந்த அமைப்பின் அலுவலகங்கள், நிர்வாகிகளின் வீடுகள் என தமிழ்நாடு உள்ளிட்ட 15 மாநிலங்களில் தேசிய புலனாய்வு அமைப்பினர் (என்.ஐ.ஏ.) கடந்த 22-ந்தேதி அதிரடி சோதனைகளை நடத்தி 100-க்கும் மேற்பட்டவர்களை கைது செய்தனர். தொடர்ந்து 8 மாநிலங்களில், போலீசார் அதிரடி சோதனைகள் நடத்தி, 150-க்கும் மேற்பட்டோரை கைது செய்தனர். தொடர்ந்து தேசிய புலனாய்வு அமைப்பினர் நடத்திய …

Read More

காங்கிரஸ் தலைவர் தேர்தலில் மூன்றாவது வேட்பாளர் போட்டியிட வாய்ப்பு? ஜி23 குழு தலைவர்கள் ஆலோசனை

காங்கிரஸ் தலைவர் தேர்தலில் போட்டியிட உள்ள சசி தரூர் இன்று பிற்பகல் வேட்புமனு தாக்கல் செய்யப்போகிறார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், ஜி23 குழுவை சேர்ந்த சசி தரூர் போட்டியிடுவதை அவர்கள் ஆதரிக்கவில்லை எனத் தெரிகிறது. மற்றொரு வேட்பாளராக களம் காண உள்ள திக்விஜய சிங் இற்று வேட்புமனு தாக்கல் செய்யப்போகிறார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே வேளையில், “யார் யாரெல்லாம் வேட்புமனு தாக்கல் செய்யப்போகிறார்கள் என்பது தெரிந்த பின், சிறந்த வேட்பாளருக்கு எங்கள் ஆதரவு இருக்கும்” என்று பிருத்விராஜ் சவான் தெரிவித்தார். காங்கிரஸ் தலைவர் தேர்தலில் …

Read More

வெளிநாட்டுக்கு டாலர் கடத்திய வழக்கு: கேரள முதல்வரின் முன்னாள் முதன்மை செயலாளர் குற்றவாளியாக சேர்ப்பு

கேரளாவில் 2020-ம் ஆண்டு நடந்த தங்கம் கடத்தல் விவகாரம் தொடர்பாக முக்கிய குற்றவாளிகளான சுவப்னா சுரேஷ், சரித் உள்பட 20-க்கு மேற்பட்டோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இதில் டாலர் நோட்டுகள் வெளிநாட்டுக்கு கடத்திய வழக்கில் முதல்-மந்திரியின் முன்னாள் முதன்மை செயலாளர் சிவசங்கரன் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இதை தொடர்ந்து அவர் பணியில் இருந்து 2020-ம் ஆண்டு பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். பின்னர் அவர் கடந்த ஜனவரி மாதம் மீண்டும் அரசு பணியில் சேர்ந்தார். இந்த நிலையில், டாலர் கடத்தல் வழக்கு எர்ணாகுளம் …

Read More