International – Dinaseithigal

பிரான்சில் கத்திக்குத்துக்கு உள்ளான பெண் உயிரிழப்பு

பிரான்சில் உள்ள Évry-Courcouronnes (Essonne) நகரில் வசிக்கும் பெண் ஒருவர், கத்திக்குத்துக்கு உள்ளான நிலையில் கொல்லப்பட்டுள்ளார். அந்த பெண்ணின் கணவர் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த செவ்வாய்க்கிழமை இரவு 11 மணி அளவில் இச்சம்பவம் நடைபெற்றுள்ளது. பொலிஸாருக்கு தொலைபேசி மூலமாக கிடைத்த தகவலை அடுத்து, சம்பவ இடத்துக்கு அவர்கள் விரைந்து சென்றனர். அப்போது அங்குள்ள வீடொன்றில் 43 வயதுடைய பெண் ஒருவர் கத்திக்குத்துக்கு உள்ளாகி இரத்த வெள்ளத்தில் கிடந்துள்ளார். இதில் அவரது 14 வயதுடைய மகள் ஒருவரே காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளார். இந்த பெண் பல …

Read More

பிரான்ஸ் தலைநகரில் இருந்து வெளியேற்றப்பட்ட அகதிகள்

பிரான்ஸ்சில் அமைந்துள்ள பாரிஸ் 19 ம் வட்டாரத்தில் சுகாதாரமற்ற முறையில் தங்கியிருந்த அகதிகள் பலர் நேற்று முன்தினம் காலை வெளியேற்றப்பட்டனர். இதில் Canal de l’Ourcq இற்கு அருகே முகாம்கள் அமைத்து தங்கியிருந்த அகதிகளே நேற்று முன்தினம் காலை வெளியேற்றப்பட்டனர். இதில் வெளியேற்றப்பட்ட அனைவரும் ஆண்கள் எனவும், மொத்தமாக 354 பேர் வெளியேற்றப்பட்டனர் எனவும் கூறப்பட்டுள்ளது. இப்படி  வெளியேற்றப்பட்ட அகதிகள் அனைவரும் இல்-து-பிரான்சுக்குள் உள்ள பல்வேறு அகதி முகாம்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

Read More

பிரான்சில் நடைபெறும் ஆசிரியர்கள் வேலை நிறுத்தத்தால் இயல்பு நிலை பாதிப்பு

பிரான்சில் ஆசிரியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவதை அடுத்து, நேற்று பாரிஸ் மற்றும் அதன் புறநகரங்களில் 70 பள்ளிகள் மூடப்பட்டிருந்தன . ஊதிய உயர்வு கோரி இந்த வேலை நிறுத்தம் ஆசிரியர்களால் முன்னெடுக்கப்பட்டது . ஆசிரியர் தொழிற்சங்கமான SNUipp-FSU இந்த வேலை நிறுத்தத்துக்கு அழைப்பு விடுத்திருந்தது . இரண்டில் ஒரு ஆசிரியர்கள் நேற்று வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவதாக இருந்ததால் பாரிஸ் மற்றும் அதன் புறநகரங்களிலும் 70 பள்ளிகள் மூடப்படுவதாக கூறப்பட்டுள்ளது.

Read More

வெளிநாடு ஒன்றில் நோய்வாய்ப்பட்ட நபர் தாயகம் திரும்பியதாக தகவல்

சவுதி அரேபியாவில் ஓட்டுனராக வேலைபார்த்து வந்த நிலையில் மூளையில் ஏற்பட்ட உபாதை காரணமாக கடுமையாக உடல்நலமுற்றிருந்த இலங்கையர் ஒருவர் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் தலையீட்டினால் நேற்று முந்தினம் நாட்டுக்கு அழைத்துவரப்பட்டதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தகவல் தெரிவித்துள்ளது. இதில் புத்தளம் மதுரங்குளிய பிரதேசத்தில் வசிக்கும் 52 வயதான சேகு அப்துல் காதர் இப்ராஹிம் என்ற நபர் கடந்த 2019 ம் ஆண்டு வாகனம் ஓட்டும் பணிக்காக வெளிநாடு போயிருந்த நிலையில் அவரது உடல்நிலை சரியில்லாமல் இருந்ததால் அவரை மீண்டும் நாட்டிற்கு அழைத்து வருமாறு …

Read More

கனடாவுக்கு செல்ல விரும்புபவர்களுக்கு வெளியான முக்கிய தகவல்

இப்போது கனடாவிற்கு புலம்பெயர விரும்புபவர்களுக்கு வயது எவ்வளவு தூரம் முக்கிய இடம் வகிக்கிறது என்பது பலருக்கு தெரியாத விசயமாக உள்ளது. ஏனென்றால் தற்போது கனடாவில் பணியில் இருக்கும் பலர் அடுத்த சில வருடங்களில் ஓய்வு பெறவிருக்கும் நிலையில் அந்த இடத்திற்கு புதியவர்களை நியமிக்க இள வயதினரையே கனடா விரும்புகிறது. ஆகவே, 44 வயதிற்கு மேறபட்டவர்களின் விண்ணப்பம் பரிசீலிக்கப்படுவது பெரும்பாலும் குறைவானதாகவே காணப்படுகிறது. அங்கு எக்ஸ்பிரஸ் நுழைவுத் திட்டத்தின் கீழ், CRS என்பது, புள்ளிகள் பிரகாரம் கனேடிய நிரந்தர குடியிருப்பு அனுமதிக்கு விண்ணப்பிக்கும் ஒருவரை தரவரிசைப்படுத்தும் …

Read More

நாட்டில் பசியால் வாடும் குடும்பங்கள் – வெளிவந்த பகீர் விவரம்

தற்போது இலங்கையில் எரிபொருள் மற்றும் உணவுப் பண்டங்களின் விலை அதிகரிப்பு காரணமாக உணவைப் பெற்றுக் கொள்வதற்கான வாய்ப்பு குறைந்துள்ளதாகவும் இதனால் பத்தில் நான்கு குடும்பங்கள், போதிய உணவுகளை உட்கொள்வதில்லை என உலக உணவுத் திட்டம் அபாய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இலங்கையில் சமீபகாலமாக தீவிரமடைந்து வரும் பொருளாதார நெருக்கடி உணவுப் பாதுகாப்பை தொடர்ந்து அச்சுறுத்தி வருகிறது. நாட்டு மக்களின் உணவு முறை ஆபத்தான நிலையில் இருப்பதுடன் செயற்பாடுகள் துரிதப்படுத்தப்படாவிட்டால் நிலைமை மேலும் மோசமடையக்கூடும் என்றும் எச்சரிக்கை செய்யப்பட்டுள்ளது.

Read More

அரசுக்கு எதிராக கிளம்ப மக்களுக்கு அழைப்பு விடுத்த பேராயர்

நாட்டில் தேர்தலில் வாக்களிப்பது மக்களின் மிக முக்கியமான கடமை எனவும், தங்களின் வாக்களிப்பு வழியாக, மக்கள், இலங்கை அரசுக்கு தகுந்த பதிலளிக்க முடியும் எனவும், கர்தினால் மல்கம் இரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளார். தலைநகர் கொழும்பு புறநகர்ப் பகுதியான மத்துமகல பிரதேசத்தில் உள்ள தூய இருதய ஆலயத்தில் இப்படி பேசியுள்ள, கொழும்பு பேராயர் கர்தினால் இரஞ்சித் , நாட்டின் பொதுத் தேர்தலோடு, உள்ளூராட்சி தேர்தல்களையும் நடத்தவேண்டும் என்று, தேசிய தேர்தல் ஆணையத்திற்கு அறிவுறுத்தியிருக்கிறார் .நாட்டின் பொருளாதார நெருக்கடியின் காரணமாக, நடுத்தர மக்கள் ஏழ்மை நிலைக்கு மாறி, …

Read More

இப்போது இலங்கைக்கு வைக்கப்பட்ட இலக்கு …வெளியான அதிர்ச்சி தகவல்

இலங்கை சமீபகாலமாக பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள நிலையில், அதை ஒரு வாய்ப்பாக பயன்படுத்தி அரசை பணயக் கைதி ஆக்குவதற்கு விக்னேஸ்வரன் உள்ளிட்ட தரப்பினர் முயற்சிக்கின்றனர் என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினரும், முன்னாள் இராணுவத் தளபதியுமான பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். இதில் புலம்பெயர் தமிழர்கள் இலங்கையில் முதலிடுவதற்கு தயாராகவே உள்ளனர். அது நிகழ வேண்டுமானால் சில நிபந்தனைகள் நிறைவேற்றப்பட வேண்டும் என்று தமிழ் கட்சிகளால் விடுக்கப்பட்டுள்ள அறிவிப்பு தொடர்பில் ஊடகங்களிடம் கருத்து கூறுகையில் சரத் பொன்சேகா இவ்வாறு தெரிவித்துள்ளார்.

Read More

பல நாடுகள் தொடர்பில் சீனா போட்டுள்ள மிகப்பெரும் திட்டம்

தற்போது பிரிட்டன் , கனடா, உள்ளிட்ட 21 நாடுகளில் 30 சட்டவிரோத காவல் நிலையங்களை அமைத்து சீனா கண்காணித்து வருவதாக புலனாய்வு நாளேடான ரிபோர்டிகா செய்தி தெரிவித்துள்ளது . உலகின் வல்லரசாக தன்னைக் காட்டிக்கொள்ள உலகின் பல்வேறு நாடுகளிலும் இதற்கான வேலைகளை ஆரம்பித்துள்ளதாக அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது. அந்த செய்தியில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது, பிரான்ஸ், உக்ரைன், ஸ்பெயின், ஜெர்மனி, பிரிட்டன் , கனடா, அயர்லாந்த் ஆகிய நாடுகளில் இதுபோன்ற சீனக் காவல் நிலையங்கள் சட்டவிரோதமாக செயற்படுகின்றன. மேலும் கனடாவில் பொதுப் பாதுகாப்பு அமைப்புடன் சேர்ந்து …

Read More

இலங்கையில் இனியும் உச்சம் தொடவுள்ள உணவு பொருளின் விலை

இலங்கையில் பாண் ஒரு இறாத்தலை 500 ரூபாவிற்கு விற்பனை செய்வதற்கு வெதுப்பக உரிமையாளர்கள் கட்டாயப்படுத்தப்பட்டுள்ளனர் என இலங்கை வெதுப்பக உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் என் கே ஜயவர்தன கூறியுள்ளார் . அதனுடன் , வரி வசூலிப்புகள் அதிகரிப்பு மற்றும் கோதுமை மாவின் விலை அதிகரிப்பு போன்றவற்றை அடிப்படையாக கொண்டு நோக்கும் போது அவ்வாறான விலையில் பாணை விற்பனை செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார். இதில் தொடர்ந்து பேசிய அவர், ” வெதுப்பக உற்பத்தி பொருட்களின் விலையை எதிர்வரும் ஒக்டோபர் மாதம் முதலாம் …

Read More