Crime – Dinaseithigal

காதல் விவகாரத்தில் ஏற்பட்ட கைகலப்பு சம்பவம்

இலங்கையில் கடந்த 26 ம் தேதி கிரிபத்கொடை பகுதியில் வைத்து மாணவன் ஒருவரை தாக்கியதாக தெரிவித்து இராஜாங்க அமைச்சர் பிரசன்ன ரணவீரவின் மகன் உள்ளிட்ட சிலர் கைது செய்யப்பட்டனர். கிரிபத்கொடையில் உள்ள பிரபல பயிற்சி வகுப்புக்கு வந்த மாணவன் மீது 26 ம் தேதி இரவு 7.30 மணியளவில், கொடூரமான முறையில் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த சம்பவத்தில் கைது செய்யப்பட்டவர்கள் அமைச்சிற்கு சொந்தமான WP KX 8472 என்ற எண் கொண்ட வாகனத்தில் வருகை தந்த அமைச்சரின் மகன் உள்ளிட்ட குழுவினர் இந்த தாக்குதலை …

Read More

பிரபல விமான நிலையத்தில் பாதுகாப்பு அதிகாரி ஒருவர் கைது

இலங்கையில் ரூபா 20 மில்லியன் மதிப்பிலான தங்க பிஸ்கட்டுகளை கடத்திச் செல்ல முயன்ற சிரேஷ்ட பாதுகாப்பு அதிகாரி ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். இதில் களனி பிரதேசத்தை சேர்ந்த 40 வயதான அதிகாரியே இப்படி கைது செய்யப்பட்டவராவார். இலங்கை சுங்க போதைப்பொருள் கட்டுப்பாட்டு பிரிவு அதிகாரிகளால் சந்தேகநபர் நேற்று கைது செய்யப்பட்டுள்ளார் . அவர் கட்டுநாயக்க விமான நிலைய வளாகத்தில் இருந்து ஒரு கிலோ எடை கொண்ட தங்க பிஸ்கட்டுகளை கடத்த முயன்றிருக்கிறார் . துபாயில் இருந்து நேற்று காலை …

Read More

தனியாக வசித்த பெண்ணிடம் நடைபெற்ற துணிகர கொள்ளை

இலங்கையில் யாழ்ப்பாணம் தொல்புரம் பகுதியில் தனிமையில் வசித்த பெண்ணொருவரை வீட்டினுள் அத்துமீறி நுழைந்த இரண்டு பேர் தாக்கி பெண்ணின் நகைகளை கொள்ளையடித்து சென்றுள்ளனர். அந்த பெண் வீட்டில் தனிமையில் வசித்து வரும் நிலையில் நேற்று முன்தினம் அதிகாலை இருவர் வீட்டின் வளாகத்தினுள் பொருத்தப்பட்டு இருந்த கண்காணிப்பு கேமராக்களை உடைத்து சேதப்படுத்திய பின்னர், வீட்டின் பிரதான கதவினை சேதப்படுத்தி வீட்டினுள் அத்து மீறி நுழைந்து பெண் மீது தாக்குதலை நடத்தி விட்டு தப்பி சென்றுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பில் வட்டுக்கோட்டை பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டதை அடுத்து …

Read More

பள்ளிக்கு சென்ற மாணவியை கடத்த முயன்றதால் ஏற்பட்ட பரபரப்பு

இலங்கையில் பள்ளிக்கு சென்று கொண்டிருந்த 12 வயது சிறுமியை கடத்த முயன்ற சம்பவம் இரத்தினபுரியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இரத்தினபுரி பள்ளியில் நான்காம் ஆண்டு கல்வி கற்கும் சிறுமியான மாணவி நேற்று முன்தினம் காலை பள்ளிக்கு நடந்து சென்றுள்ளார். அப்போது புதர் ஒன்றுக்கு பின்னால் முககவசம் அணிந்திருந்த மர்ம நபர் திடீரென வீதிக்கு வந்து மாணவியின் கழுத்துப்பட்டியை பிடித்து கைகளை கட்டி கடத்த முயற்சித்துள்ளார். இதனை கவனித்த ​​அருகில் உள்ள தோட்டத்தில் வேலை செய்து கொண்டிருந்த பெண் ஒருவர் உடனடியாக அந்த இடத்திற்கு விரைந்து வந்து …

Read More

சின்னசேலம் அருகே கள்ள சாராயம் பதுக்கி விற்றவர் கைது

கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் பகுதியை சேர்ந்தவர் ஆறுமுகம் (56). இவர் தனது வீட்டின் அருகில் கள்ள சாராயம் வைத்து விற்பனை செய்வதாக கச்சிராயபாளையம் போலீசருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் ஆறுமுகம் வீட்டுக்கு சென்று சோதனை செய்தனர. அப்போது அருகில் 2 லாரி டியூப்பில் 55 லிட்டர் கள்ள சாராயம் வைத்திருந்ததை போலீசார் கண்டுபிடித்தனர். இதையடுத்து போலீசார் 55 லிட்டர் கள்ள சாராயத்தை பறிமுதல் செய்த ஆறுமுகத்தை கைது செய்தனர்.

Read More

சங்கராபுரம் அருகே விஷம் குடித்து இளம்பெண் தற்கொலை

சங்கராபுரம் பகுதியை சேர்ந்தவர் காவ்யா (20). இவர் வீட்டில் வேலை செய்யாமல் இருந்து வந்துள்ளார். இதை அவரது தாய் கண்டித்ததால் மனமுடைந்த காவ்யா விஷத்தை குடித்துள்ளார். இதையடுத்து அவரை சங்கராபுரம் தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி காவ்யா பரிதாபமாக இறந்தார். இது குறித்த புகாரின் பேரில் சங்கராபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Read More

சத்தியமங்கலம் அருகே சூதாடிய 6 பேர் கைது

சத்தியமங்கலம் போலீசார் அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது கெஞ்சனூர் பகுதியில் சிலர் பணம் வைத்து சூதாடிக் கொண்டு இருந்தனர். போலீசார் அந்த கும்பலை மடக்கி பிடித்தனர். விசாரணையில் அதே பகுதியை சேர்ந்த வெள்ளியங்கிரி (37), அப்புசாமி (30), வெங்கடேஷ் (31), ஆனந்த ஜோதி (37), கமலக்கண்ணன்(42), முரளிசங்கர் (32) என்பது தெரிய வந்தது. இது குறித்து சத்தியமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து 6 பேரையும் கைது செய்தனர். அவர்களிடமிருந்து தாயக்கட்டை மற்றும் பணம் ரூ.580-யை பறிமுதல் செய்தனர்.

Read More

வேடசந்தூர் அருகே கஞ்சா விற்ற வாலிபர் கைது

விட்டல்நாயக்கன்பட்டி பகுதியில் தனிப்படை போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அங்கு கஞ்சா விற்பனை செய்த தமிழரசன்(21) என்பவரை கைது செய்து அவரிடமிருந்து 600 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர். கைது செய்யப்பட்ட நபர்கள் மற்றும் பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சா பொருட்களை வேடசந்தூர் போலீசில் ஒப்படைத்தனர்.

Read More

வேடசந்தூர் அருகே குட்கா விற்ற 3 பேர் கைது

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் பகுதியில் போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது சுக்காம்பட்டியில் குட்கா விற்ற சிவக்குமார்(46), கவாஸ்கர்(30), முத்துச்சாமி(57) ஆகிய 3 பேரை கைது செய்து அவர்களிடமிருந்து 30 கிலோ குட்காவை பறிமுதல் செய்தனர்.

Read More

திண்டுக்கல்லில் கலெக்டர் உத்தரவை காற்றில் பறக்க விடும் பெட்ரோல் பங்க் உரிமையாளர்கள்

திண்டுக்கல் குடைப்பாறைப்பட்டில் பா.ஜ.க. நிர்வாகியின் வாகன குடோனுக்கு தீ வைப்பு சம்பவம் நடந்தது. இதுபோன்ற நிகழ்வுகளை தடுக்கும் வகையில் மாவட்டத்தில் உள்ள அனைத்து பெட்ரோல் பங்குகளிலும் பாட்டில் மற்றும் கேன்களில் பெட்ரோல் வழங்க கூடாது என்று உரிமையாளர்களுக்கு மாவட்ட கலெக்டர் மற்றும் போலீஸ் சூப்பிரண்டு உத்தரவு பிறப்பித்திருந்தனர். இந்நிலையில் இன்று திண்டுக்கல்லில் உள்ள ஒரு பெட்ரோல் பங்கில் கேன்களில் பெட்ரோல் வழங்கப்பட்டது. கலெக்டர் உத்தரவுக்கு பிறகும் இதுபோன்ற சம்பவம் ெதாடர்ந்து பல்வேறு பங்குகளிலும் நடந்து வருவதாக பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

Read More