குழந்தைகளுக்கு உலர் திராட்சையை எப்போது கொடுக்கலாம்?

குழந்தைகள் உணவை மெல்ல தொடங்கும் போது அல்லது 8 மாத காலத்துக்கு பிறகு உலர் திராட்சையை சாப்பிட கொடுக்கலாம். சிறிய குழந்தைக்கு உலர் திராட்சையை ஊறவைத்து கூழ் போல் மசித்து கொடுக்கலாம். நாள் ஒன்றுக்கு 1 டீஸ்பூன் அளவு சாறு கொடுக்கலாம். குழந்தைக்கு உலர் திராட்சை கொடுக்கும் போது ஒவ்வாமை உண்டாகிறதா என்பதை கவனிக்க வேண்டும். குழந்தைக்கு உலர் திராட்சை கொடுப்பதால் நினைவாற்றல் மேம்படும். மூளைக்கு ஊட்டமளிக்கும். செரிமானத்தை ஊக்குவிக்கும். காய்ச்சலின் போது உலர்ந்த திராட்சை ஊறவைத்த […]

Read More

நீரிழிவு நோய் வராமல் தடுக்க உதவும் உணவுகள்

1) நார்ச்சத்து அதிகமுள்ள வாழைப்பூ, வாழைத்தண்டு, அவரை, பீன்ஸ், நூல்கோல், நெல்லிக்காய், வெந்தயம், வெண்டைக்காய், பாகற்காய், கோவைக்காய், புடலங்காய், சுரைக்காய், கீரைகளை சேர்க்க வேண்டும். மாவுச்சத்து, இனிப்பு சேர்ந்த உணவுகளை அளவோடு எடுக்க வேண்டும். 2) நெல்லிக்காய், கறிவேப்பிலை இரண்டையும் அரைத்து அதன் சாறு 30 மிலி வீதம் தினமும் குடிக்கலாம். இது உடல் சோர்வை நீக்கி புத்துணர்ச்சி தரும். 3) வெந்தயம், கருஞ்சீரகம் இரண்டையும் சம அளவில் எடுத்து வறுத்து பொடித்து வைத்துக்கொள்ள வேண்டும், தினமும் […]

Read More

சாக்லேட் பேரீச்சம் பழ லட்டு செய்வது எப்படி?

தேவையான பொருட்கள் : பேரீச்சம்பழம் – 1/4 கிலோ சாக்லேட் – 100 கிராம் தேங்காய் – 1/2 மூடி செய்முறை : பேரீச்சம்பழத்தின் கொட்டைகளை நீக்கி மிக்சியில் கொரகொரப்பாக அரைத்து கொள்ளவும். தேங்காயை துருவி கொள்ளவும். சாக்லேட்டை உருக்கி கொள்ளவும். உருக்கிய சாக்லேட்டில் பேரீச்சம்பழ விழுது, தேங்காய் துருவல் சேர்த்து நன்றாக கலந்து உருண்டைகளாக பிடித்து பரிமாறவும்.

Read More

ஆலங்குடியில் சாராயம் விற்ற வாலிபர் கைது

புதுக்கோட்டைமேட்டுப்பட்டி பகுதியை சேர்த்த ராஜ்குமார் மகன் சிவகுமார் (23). இவர் கறம்பக்குடி அருகே உள்ள அழகன்விடுதி பகுதியில் சாராயம் பதுக்கி விற்பனை செய்வதாக ஆலங்குடி மதுவிலக்கு போலீசார் தகவல் கிடைத்தது. இதையடுத்து அங்கு சென்று நடத்திய போலீசார் அவரிடமிருந்து 10 லிட்டர் சாரயம் பறிமுதல் செய்யப்பட்டது. பின்னர் அவர் மீது வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.

Read More

பாபநாசம் அருகே ரத்ததான முகாம்

பாபநாசம் அடுத்த ராஜகிரியில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் மற்றும் தஞ்சாவூர் அரசு ராசா மிராசுதார் மருத்துவமனை ஆகியவை இணைந்து ரத்ததான முகாம் நடைபெற்றது. இதில் 50-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு ரத்ததானம் செய்தனர்.

Read More

பண்ருட்டியில் இளம்பெண் மாயம் – போலீசார் விசாரணை

பண்ருட்டி எல்.ஆர்.பாளையம் பகுதியை சேர்ந்த கோபால் மகள் சரண்யா (20). இவர் கடந்த 24-ம் தேதி திடீரென மாயமானார். இதுகுறித்து கோபால் பண்ருட்டி போலீசில் புகார் செய்தனர். இதையடுத்து வழக்கு பதிவு செய்து தீவிரமாக தேடி வருகின்றனர். இவரை பாளையம் தர்கா கோவில் தெருவை சேர்ந்த சூர்யா (20) கடத்தி சென்றதாக கூறப்படுகிறது.  

Read More

குழந்தையுடன் மாயமான தாய் மீட்பு

கடலூர் மாவட்டம் பண்ருட்டி பகுதியை சேர்ந்தவர் பொன்னம்பலம். அவரது மனைவி வள்ளி (32). அவரது மகன் பிரதீப் (5). கடந்த 4 நாட்களுக்கு முன்பு வள்ளி கணவரிடம் மருத்துவமனைக்கு செல்வதாக மகனை அழைத்து சென்றார். பின்னர் அவர் வீடு திரும்பவில்லை. இதுகுறித்து பண்ருட்டி போலீசில் பொன்னம்பலம் புகார் செய்தார். இதையடுத்து போலீசார் வழக்கு பதிந்து வள்ளி மற்றும் குழந்தையை தேடி வந்தனர். இந்த நிலையில் வள்ளியை பண்ருட்டி போலீசார் தேடி கண்டுபிடித்து கணவன் மற்றும் குடும்பத்தினரிடம் ஒப்படைத்தனர் […]

Read More

குஜராத் தொங்கு பாலம் விபத்து – ஒரேவா நிறுவன உரிமையாளர் முக்கிய குற்றவாளியாக சேர்ப்பு

குஜராத் மாநிலம் மோர்பி என்ற இடத்தில் ஆற்றின் குறுக்கே அமைக்கப்பட்டிருந்த மிக பழமையான தொங்கு பாலம் கடந்த அக்டோபர் மாதம் திடீரென இடிந்து விழுந்தது. பாலம் புதுப்பிக்கப்பட்டு திறக்கப்பட்ட 4 நாளில் இந்த பயங்கர விபத்து ஏற்பட்டது. இதில், 135 பேர் உயிரிழந்தனர். இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர். இந்நிலையில், இந்த வழக்கில் 1262 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகை இன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில், தொங்கு பாலத்தை பழுதுபார்த்து புதுப்பித்து, பராமரிக்கும் பணியை மேற்கொண்டு […]

Read More

இரட்டை இலை சின்னம் – ஈபிஎஸ் உச்ச நீதிமன்றத்தை மனு தாக்கல்

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், எடப்பாடி பழனிசாமி தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் இடையீட்டு மனு தாக்கல் செய்ய முடிவு செய்யப்பட்டது. இதற்கு அனுமதிக்ககோரி நீதிபதிகளிடம் இன்று முறையீடு செய்யப்பட்டது. அதில், ஜூலை 11ம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழு தீர்மானங்களை தேர்தல் ஆணைய இணையதளத்தில் பதிவேற்ற உத்தரவிடவேண்டும் என கேட்டுக்கொள்ளப்பட்டது. தேர்தல் ஆணைய இணையதளத்தில் அதிமுக பொதுக்குழு தீர்மானம் பதிவேற்றப்படும்பட்சத்தில் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான பொதுக்குழுவை தேர்தல் ஆணையம் ஏற்றுக்கொண்டதாக ஆகிவிடும். எடப்பாடி […]

Read More

இந்தியாவில் புதிதாக 99 பேருக்கு கொரோனா பாதிப்பு

இந்தியாவில் புதிதாக 99 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4 கோடியே 46 லட்சத்து 82 ஆயிரத்து 437 ஆக உயர்ந்துள்ளது. தொற்று பாதிப்பில் இருந்து இதுவரை 4 கோடியே 41 லட்சத்து 49 ஆயிரத்து 802 பேர் குணமடைந்துள்ளனர். தற்போது 1,896 பேர் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். தொற்று பாதிப்பால் நேற்று மகாராஷ்டிரத்தில் ஒருவர் இறந்துள்ளார். மொத்த பலி எண்ணிக்கை 5,30,739 ஆக உயர்ந்துள்ளது.  

Read More