Periya Swamy – Page 647 – Dinaseithigal

சோ ஓயு மலையின் உச்சி முதன் முறையாக எட்டப்பட்டது

அக்டோபர் 19 : இன்றைய தினத்தில் நிகழ்ந்த முக்கிய நிகழ்வுகள் 1944 – இரண்டாம் உலகப் போர்: ஐக்கிய அமெரிக்கப் படைகள் பிலிப்பைன்சில் தரையிறங்கின. 1944 – குவாத்தமாலாவில் பத்தாண்டுகள் நீடித்த இராணுவப் புரட்சி ஆரம்பமானது. 1950 – சீனாவின் மக்கள் விடுதலை இராணுவத்தினர் திபெத்தின் காம்டோ நகரைக் கைப்பற்றினர். 1950 – சீனா கொரியப் போரில் இணைந்தது. பல்லாயிரக்கணக்கான இராணுவத்தினர்  ஐநா  படைகளை  எதிர்க்க யாலு ஆற்றைத் தாண்டினர். 1954 – சோ ஓயு மலையின் உச்சி முதன் முறையாக எட்டப்பட்டது. 1956 – சோவியத் ஒன்றியமும் யப்பானும் அமைதி ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டதன் மூலம் 1945 ஆகத்து முதல் இரு நாடுகளுக்குமிடையே நீடித்து வந்த போர் முடிவுக்கு வந்தது.

Read More

மேக்ஸ் பிளாங்க் கரும்பொருள் கதிரியல் விதியை கண்டுபிடித்தார்

அக்டோபர் 19 : இன்றைய தினத்தில் நிகழ்ந்த முக்கிய நிகழ்வுகள் 1900 – மேக்ஸ் பிளாங்க் கரும்பொருள் கதிரியல் விதியை (பிளாங்கின் விதி) கண்டுபிடித்தார். 1912 – இத்தாலி திரிப்பொலி நகரை உதுமானியரிடம் இருந்து கைப்பற்றியது. 1921 – லிஸ்பன் நகரில் இடம்பெற்ற இராணுவப் புரட்சியை அடுத்து போர்த்துக்கல் பிரதமர் அந்தோனியோ கிராஞ்சோ உட்படப் பல அரசியல்வாதிகள் கொல்லப்பட்டனர். 1935 – எதியோப்பியாவை இத்தாலி கைப்பற்றியதை அடுத்து உலக நாடுகளின் கூட்டணி இத்தாலி மீது பொருளாதாரத் தடைகளை அறிவித்தது. 1943 – 2,098 இத்தாலிய போர்க் கைதிகளுடன் சென்ற சின்ஃபிரா என்ற சரக்குக் கப்பல் கிரீட் நகரில் சௌதா குடாவில் கூட்டுப் படையினரால் தாக்கப்பட்டு மூழ்கடிக்கப்பட்டது. 1943 – காச நோய்க்கான இசுட்ரெப்டோமைசின் என்ற முதலாவது நுண்ணுயிர் எதிர்ப்பி மருந்து  இரட்கர்சு பல்கலைக்கழகத்தில் பிரித்தெடுக்கப்பட்டது.

Read More

பிரான்சின் நெப்போலியன் பொனபார்ட் மாஸ்கோவில் இருந்து பின்வாங்கினான்.

அக்டோபர் 19 : இன்றைய தினத்தில் நிகழ்ந்த முக்கிய நிகழ்வுகள் 1805 – நெப்போலியப் போர்கள்: ஊல்ம் நகர சமரில் ஆஸ்திரியாவின் தளபதி மாக்கின் இராணுவம்  நெப்போலியன் பொனபார்ட்டிடம் சரணடைந்தது. 30,000 கைதிகள் கைப்பற்றப்பட்டனர், 10,000 இறந்தனர். 1812 – பிரான்சின் நெப்போலியன் பொனபார்ட் மாஸ்கோவில் இருந்து பின்வாங்கினான். 1813 – செருமனியின் லைப்சிக் நகரில் நெப்போலியன் பொனபார்ட் பெரும் தோல்வியடைந்தான்.  ரைன் கூட்டமைப்பு முடிவுக்கு வந்தது. 1864 – அமெரிக்க உள்நாட்டுப் போர்: கூட்டமைப்புப் படையினர்  கனடாவில் இருந்து  வேர்மொண்ட் மாநிலத்தின் சென் அல்பான்ஸ் நகரைத் தாக்கினர். 1866 – ஆஸ்திரியா வெனிட்டோ, மாந்துவா ஆகியவற்றை பிரான்சிடம் கையளித்தது. பிரான்சு உடனடியாகவே அவற்றை இத்தாலியிடம் கொடுத்தது.

Read More

அக்டோபர் 19 : இன்றைய தினத்தில் நிகழ்ந்த முக்கிய நிகழ்வுகள்

கிமு 202 – சாமா நகரப் போரில், உரோமைப் படையினர் கார்த்திச் நகரக் காவலர்களின் தலைவர்  அனிபாலை வென்றனர். 1216 – இங்கிலாந்தின் ஜான் மன்னர் இறக்க, அவரது ஒன்பது வயது மகன் மூன்றாம் என்றி ஆட்சிக்கு வந்தான். 1453 – பிரான்சியர்கள் பொர்தோ நகரைக் கைப்பற்றியதுடன் நூறாண்டுப் போர் முடிவுக்கு வந்தது. 1469 – அரகொன் நாட்டு இளவரசன் இரண்டாம் பேர்டினண்டுக்கும் காஸ்டில் நாட்டின் இளவரசி  முதலாம் இசபெல்லாவுக்கும் திருமணம் நடைபெற்றது. இந்நிகழ்வு பின்னர் 1516 இல்  எசுப்பானியா  நாடு ஒருங்கிணைக்கப்பட வழிகோலியது. 1596 – சான் பிலிப் என்ற எசுப்பானியக் கப்பல் சப்பான் கரையில் மூழ்கியது. 1781 – வர்ஜீனியா, யோர்க்டவுன் நகரில் பிரித்தானியத் தளபதி கார்ன்வாலிசு பிரபுவின் பிரதிநிதிகள்  சியார்ச் வாசிங்டனிடம் சரணடைந்தனர்.

Read More

கொரோனா வைரஸ் பற்றிய தற்போதைய நிலவரங்கள்

அமெரிக்காவில் இறந்தவர்கள்  – 744,385 பாதிக்கப்பட்டோர் – 45.7 மில்லியன் இந்தியாவில் இறந்தவர்கள் – 452,290 பாதிக்கப்பட்டோர் – 34 மில்லியன்  வெளிநாடுகளில் /வெளிநகரங்களில் பாதிக்கப்பட்டோர்: பிரேசில் – 21.6 மில்லியன் பிரிட்டன் – 8.4 மில்லியன் ரஷ்யா – 7.9 மில்லியன் துருக்கி – 7.6 மில்லியன் பிரான்ஸ் -7 மில்லியன் ஈரான் – 5.7 மில்லியன் அர்ஜென்ட்டினா – 5.2 மில்லியன் ஸ்பெயின் – 4.9 மில்லியன் பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை (மற்ற நாடுகளையும் சேர்த்து: 241.1 மில்லியன் இறந்தவர்கள்: பிரேசில் …

Read More

கரியமில வாயு வெளியேற்றத்தைக் குறைக்க தென் கொரியா திட்டம்

தென்கொரியா பருவநிலை மாற்றத்தைக் கட்டுப்படுத்தும் முயற்சிகளை அதிகரிக்கவிருப்பதாக அறிவித்துள்ளது. 2030ஆம் ஆண்டுக்குள் கரியமில வாயு வெளியேற்றத்தை 40 விழுக்காடு குறைக்க அது திட்டமிட்டுள்ளது. மாற்றப்பட்டுள்ள இலக்குகளை எட்டுவது மிகவும் கடினமான சவால் எனத் தென்கொரிய அதிபர் மூன் ஜே இன் (Moon Jae-in) குறிப்பிட்டுள்ளார். வளர்ந்துவரும் நாடுகள் 1990இலிருந்து கரியமில வாயு வெளியேற்றத்தைக் குறைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருவதாக அவர் விளக்கினார். அடுத்த ஆண்டு அறிமுகமாகவிருக்கும் கரியமில வாயு வெளியேற்றத்தைச் சமநிலைப்படுத்தும் திட்டத்துக்காகத் தென்கொரியா சுமார் 10 பில்லியன் டாலரை ஒதுக்கியுள்ளது. அத்திட்டத்தைச் செயல்படுத்துவதற்கான …

Read More

ஜப்பானிய நீரிணையில் சுற்றி வந்த சீன, ரஷ்ய ராணுவக் கப்பல்கள்

சீனா, ரஷ்யா ஆகியவற்றின் 10 ராணுவக் கப்பல்கள் ஜப்பானிய நீரிணையில் சுற்றி வந்ததாக ஜப்பானியத் தற்காப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. ஜப்பானியத் தலைநிலத்துக்கும் ஹோக்காய்டோ தீவுக்கும் இடையில் உள்ள குறுகிய சுங்காரு நீரிணையில் இடம்பெற்ற அந்த நடவடிக்கையில், விதிமீறல் ஏதும் இல்லை என்று அமைச்சின் பேச்சாளர் கூறினார். சீனா, ரஷ்யா ஆகியவற்றுக்கிடையே உள்ள கடற்சார்ந்த ஒத்துழைப்பு குறித்து அத்தகைய கூட்டு ராணுவ நடவடிக்கைகள் இம்மாதம் 14 இலிருந்து 17ஆம் தேதி வரை இடம்பெற்றுள்ளன.

Read More

ஆட்சிக் கவிழ்ப்புக்கு எதிராக போராடிய ஆயிரக்கணக்கானோர் விடுதலை

மியன்மாரில், கடந்த பிப்ரவரி மாதம் நடந்த ஆட்சிக் கவிழ்ப்பை எதிர்த்துப் போராட்டம் நடத்தியதற்காகச் சிறையில் அடைக்கப்பட்ட ஆயிரத்துக்கும் அதிகமான கைதிகள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். யாங்கூனிலும், மற்ற பகுதிகளிலும் உள்ள சிறைச்சாலைகளில் இருந்து அவர்கள் நேற்றிரவு விடுதலை செய்யப்பட்டனர். மியன்மாரில் விடுமுறை தினம் ஒன்றை முன்னிட்டு, கைதிகள் விடுதலை செய்யப்படுவர் என்று ராணுவத் தலைவர் முன்னர் அறிவித்திருந்தார். சுமார் நாலாயிரத்துக்கும் அதிகமானோர் மீதான குற்றச்சாட்டுகளும் ரத்துசெய்யப்பட்டுள்ளன. நிருபர்கள், கலைஞர்கள், சமூக ஊடகப் பிரபலங்கள் உள்ளிட்டோர் மீதான குற்றச்சாட்டுகள் அவற்றில் அடங்கும். ஆனால், ஆட்சியில் இருந்து இறக்கப்பட்ட …

Read More

டென்மார்க் ஓபன் பேட்மிட்டனில் பி.வி. சிந்து அடுத்த சுற்றுக்கு முன்னேற்றம்

டென்மார்க் ஓபன் பேட்மிண்டன் போட்டிகள் டென்மார்க் நாட்டில் நடந்து வருகின்றன.  இதில், மகளிர் ஒற்றையர் முதல் சுற்று போட்டியில் இந்திய பேட்மிண்டன் வீராங்கனை பி.வி. சிந்து மற்றும் துருக்கி நாட்டை சேர்ந்த நெஸ்லிஹான் யிஜித் இன்று விளையாடினர்.  30 நிமிடங்கள் நீடித்த இந்த போட்டியில் 21-12, 21-10 என்ற புள்ளி கணக்கில் சிந்து வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்கு முன்னேறியுள்ளார். இதற்கு முன் இன்று நடந்த மற்றொரு போட்டியில் ஆடவர் ஒற்றையர் பிரிவில், இந்தியாவின் ஸ்ரீகாந்த் கிதம்பி மற்றும் சாய் பிரணீத் ஆகியோர் விளையாடினர்.

Read More

பப்புவா நியூ கினியா அணிக்கு எதிரான ஆட்டத்தில் ஸ்காட்லாந்து அணி வெற்றி

7-வது 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி ஓமன் மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்து வருகிறது. இதில் தற்போது முதல் சுற்று ஆட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இதன் 5-வது ஆட்டம் இன்று மதியம் 2 மணிக்கு அல் அமீரத் கிரிக்கெட் மைதானத்தில் தொடங்கியது. இந்த ஆட்டத்தில் ஸ்காட்லாந்து அணியுடன், பப்புவா நியூ கினியா அணி மோதியது. இதில் டாஸ் வென்ற ஸ்காட்லாந்து அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. ஸ்காட்லாந்து வீரர் பெர்ரிங்டன் அதிகபட்சமாக 70 ரன்கள் விளாசினார். நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் ஸ்காட்லாந்து …

Read More