உடல் எடையை அதிகரிக்க செய்யும் தவறுகள் – Dinaseithigal

உடல் எடையை அதிகரிக்க செய்யும் தவறுகள்

உடல் எடையை அதிகரிக்கும் விஷயத்தில் செய்யும் தவறுகள் பற்றி மும்பையை சேர்ந்த மருத்துவர் ஜினல் படேல் சுட்டிக்காட்டுக்கிறார். தொழில்முறை பாடிபில்டர்கள் கட்டுடல் அழகை பராமரிப்பார்கள். கட்டுமஸ்தான உடல்வாகுடன் கம்பீரமாக காட்சியளிப்பார்கள். உடல் எடையை அதிகரிக்க விரும்பு பவர்கள் பாடிபில்டர்களை போல் நாமும் ஆக வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள். அவர்களுடைய பயிற்சி முறைகளை தாமும் முயற்சித்து பார்க்க திட்டமிடுவார்கள். பாடிபில்டர்கள் எத்தகைய உணவு பழக்கத்தை கடைப்பிடிக்கிறார்கள் என்பது வெளிப்படையாக தெரியாது. ஆதலால் உடல் எடையை அதிகரிக்கும் விஷயத்தில் யாருடைய வழிமுறைகளையும் கண்மூடித்தனமாக பின்பற்ற வேண்டாம்.

எடை அதிகரிப்பு ஒரே இரவில் நடந்து விடும் விஷயமல்ல. உடல் எடையை அதிகரிக்க நிறைய முயற்சி செய்ய வேண்டியிருக்கும். உடனடி முடிவுகளை எதிர்பார்ப்பதை தவிர்க்க வேண்டும். உடற்பயிற்சி மற்றும் உணவு முறைகளை சீராக பின்பற்ற வேண்டும். அதன் பிறகு மாற்றம் படிப்படியாகவே நடக்கும். அதுவரை பொறுமையாக இருக்க வேண்டும். அப்போதுதான் எடையை அதிகரிக்கும் இலக்கை அடைய முடியும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *