இலங்கையில் இனியும் உச்சம் தொடவுள்ள உணவு பொருளின் விலை – Dinaseithigal

இலங்கையில் இனியும் உச்சம் தொடவுள்ள உணவு பொருளின் விலை

இலங்கையில் பாண் ஒரு இறாத்தலை 500 ரூபாவிற்கு விற்பனை செய்வதற்கு வெதுப்பக உரிமையாளர்கள் கட்டாயப்படுத்தப்பட்டுள்ளனர் என இலங்கை வெதுப்பக உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் என் கே ஜயவர்தன கூறியுள்ளார் . அதனுடன் , வரி வசூலிப்புகள் அதிகரிப்பு மற்றும் கோதுமை மாவின் விலை அதிகரிப்பு போன்றவற்றை அடிப்படையாக கொண்டு நோக்கும் போது அவ்வாறான விலையில் பாணை விற்பனை செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார். இதில் தொடர்ந்து பேசிய அவர், ” வெதுப்பக உற்பத்தி பொருட்களின் விலையை எதிர்வரும் ஒக்டோபர் மாதம் முதலாம் தேதி முதல் அதிகரிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளது. பெறுமதி சேர் வரி மற்றும் சமூக பாதுகாப்பு ஒத்துழைப்பு வரி அதிகரிக்கப்பட்டுள்ளமையினால் வெதுப்பக உணவு பொருட்களின் விலையை அதிகரிக்க நடவடிக்கை நடத்தப்படவுள்ளது என்று கூறியுள்ளார் .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *