ஷிகர் தவான் – ரிஸ்வான் சாதனையை முறியடித்த சூர்யகுமார் யாதவ் – Dinaseithigal

ஷிகர் தவான் – ரிஸ்வான் சாதனையை முறியடித்த சூர்யகுமார் யாதவ்

இந்தியா – தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதிய முதல் டி20 கேரளாவின் திருவனந்தபுரத்தில் நடைபெற்றது. இதில் இந்திய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. சூர்யகுமார் யாதவ் மற்றும் கேஎல் ராகுல் அரை சதம் அடித்து அசத்தினர். டி20 கிரிக்கெட்டில் சூர்யகுமார் யாதவ் அறிமுகமானதில் இருந்து மற்ற இந்திய வீரர்களைக் காட்டிலும் அதிகபட்சமாக 6 ஆட்ட நாயகன் விருதுகளை வென்று உலகின் நம்பர் 2 பேட்ஸ்மேனாக முன்னேறியுள்ளார். மேலும் நேற்றைய போட்டியில் எடுத்த 50 ரன்களையும் சேர்த்து இந்த வருடம் 732 ரன்களை எடுத்துள்ள அவர், சர்வதேச டி20 கிரிக்கெட்டில் ஒரு காலண்டர் வருடத்தில் அதிக ரன்கள் குவித்த இந்திய வீரர் என்ற ஷிகர் தவானின் சாதனை உடைத்து புதிய வரலாற்று சாதனை படைத்துள்ளார்.

இதனைத்தொடர்ந்து சிக்ஸர் பறக்க விடும் திறமை பெற்றுள்ள சூர்யகுமார் யாதவ், நேற்றைய போட்டியில் அடித்த 3 சிக்ஸர்களையும் சேர்த்து சர்வதேச டி20 கிரிக்கெட்டில் ஒரு காலண்டர் வருடத்தில் அதிக சிக்சர்கள் அடித்த பேட்ஸ்மன் என்ற பாகிஸ்தானின் முஹம்மது ரிஸ்வான் சாதனையை உடைத்து புதிய உலக சாதனை படைத்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *