டி20 உலக கோப்பை போட்டியில் இருந்து ஜஸ்பிரித் பும்ரா விலகல் – Dinaseithigal

டி20 உலக கோப்பை போட்டியில் இருந்து ஜஸ்பிரித் பும்ரா விலகல்

இந்திய அணி வீரர் ஜஸ்பிரித் பும்ரா காயம் காரணமாக டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டியிலிருந்து விலகியதாக தகவல் வெளியாகி உள்ளது. முதுகில் ஏற்பட்ட காயம் காரணமாக 4 முதல் 6 மாதங்கள் வரை பும்ரா விளையாட முடியாது என தகவல் வெளியாகி உள்ளது. அக்டோபர் 6ம் தேதியன்று டி20 உலகக்கோப்பை தொடருக்காக இந்திய அணி ஆஸ்திரேலியா புறப்படுகிறது. இந்த சமயத்தில் பும்ரா டி20 உலககோப்பையில் பங்கேற்பாரா என ரசிகர்கள் மத்தியில் கேள்வி எழுந்தது. இந்த நிலையில், டி20 உலகக்கோப்பை தொடரில் இருந்து காயம் காரணமாக இந்திய வேகப்பந்து வீச்சாளர் பும்ரா விலகியதாக தகவல் வெளியாகியிருக்கிறது. முதுகு வலி காரணமாக அவதிப்பட்டு வரும் பும்ரா, டி20 உலககோப்பை தொடரில் இருந்து விலகி உள்ளது கிரிக்கெட் ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *