ருசிமிகுந்த வெங்காய குழம்பு செய்வது எப்படி? – Dinaseithigal

ருசிமிகுந்த வெங்காய குழம்பு செய்வது எப்படி?

தேவையானவை:

சின்ன வெங்காயம் – 10
புளி – 1 எலுமிச்சை அளவு
மஞ்சள் தூள் – 1/4 டீஸ்பூன்
உப்பு – தேவைக்கு

வறுத்து அரைக்க:

தனியா – 2 டீஸ்பூன்
கடலை பருப்பு – 1 1/2 டீஸ்பூன்
வெந்தயம் – 1/2 டீஸ்பூன்
தேங்காய் – 1 டேபிள் ஸ்பூன்
மிளகாய் வற்றல் – 2

தாளிக்க:

நல்லெண்ணெய் – 3 டீஸ்பூன்
கடுகு – 1/4 டீஸ்பூன்
உளுத்தம்பருப்பு – 2 டீஸ்பூன்
சீரகம் – 1 டீஸ்பூன்
வெந்தயம் – 1/2 டீஸ்பூன்
கறிவேப்பிலை – சிறிது
பச்சை மிளகாய் – 1

செய்முறை:

முதலில் அரைக்க வேண்டிய பொருட்களை வெறும் வாணலியில் தனி தனியாக வறுத்து நன்கு பொடித்து கொள்ளவும். வெங்காயத்தை இரண்டாகவும், புளியை 2 கப் தண்ணீரில் கரைத்து கொள்ளவும்.

ஒரு வாணலியில் நல்லெண்ணெய் ஊற்றி தாளிக்க வேண்டிய பொருட்களை ஒன்றன் பின் ஒன்றாக தாளித்து கொள்ளவும். பின்னர் சின்ன வெங்காயம் போட்டு நன்கு வதக்கி கொள்ளவும்.

அதனுடன் வறுத்து அரைத்த பொடி, மஞ்சள் தூள் மற்றும் புளி தண்ணீர், உப்பு சேர்த்து கொதிக்க விடவும். குழம்பு வாசனை வந்து சற்று திக்கான பதத்திற்கு வந்தவுடன் பரிமாறலாம். ருசியான வெங்காய குழம்பு ரெடி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *