பூண்டின் மருத்துவ பயன்கள் – Dinaseithigal

பூண்டின் மருத்துவ பயன்கள்

சளி தொந்தரவு கொண்டவர்கள் பாலில் நான்கு பூண்டு பற்களைச் சேர்த்து குடித்துவந்தால் நெஞ்சில் உள்ள சளி இளகி கழிவில்  வெளியேறும். காச நோய் உள்ளவர்களுக்கும் இது சிறந்த மருந்து. பூண்டில் இருக்கும் ஈதர் நுரையீரல் குழாயில் கெட்டியான சளி அடைத்திருந்தால் அதைக் கரைத்து வெளியேற்றும்.

புற்றுநோயைத் தடுக்கும் சக்தி பூண்டுக்கு உண்டு. மேலும் புற்றுநோய் பாதிப்பால் ஏற்படக்கூடிய புண்களுக்கு மருந்து மாத்திரைகள் சாப்பிடும் போது அதனுடன் ஒரு பூண்டையும் சேர்த்து சாப்பிட்டு வந்தால் புண்கள் விரைவாக ஆறும்.

உடல் நலன் ஆரோக்கியமாக இருக்க ஆறுமாதங்களுக்கு ஒருமுறை வயிற்றில் இருக்கும் கழிவு மற்றும் பூச்சுகளை வெளியேற்ற வேண்டும். அதற்கு மருந்து, மாத்திரைகளை விட துரிதமாக பக்கவிளைவுகள் எதுவுமின்றி வெளியேற்ற உதவுகிறது பூண்டு.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *