வல்லாரை கீரை மருத்துவ பயன்கள் – Dinaseithigal

வல்லாரை கீரை மருத்துவ பயன்கள்

வல்லாரை கீரையை கொண்டு பல்துலக்கினால், பற்களில் படிந்துள்ள மஞ்சள் தன்மை நீங்கும். வல்லாரை கீரை நரம்பு தளர்ச்சியை குணமாக்கி,மூளைச் சோர்வை நீக்கி மூளையின் சிந்திக்கும் திறனை அதிகரிக்கும். அஜீரணக் கோளாறுகளை சரி செய்யும், மங்களான பார்வையை சரி செய்யும்.

பால்வினை நோய்கள், வெண்குஷ்டம் போன்ற நோய்களுக்கு வல்லாரை சிறந்த மருந்தாகும். பிரசவத்திற்கு பின் தாயின் உடல்நிலை தேறுவதற்கு வல்லாரை இலைகளை இடித்து சாறெடுத்து,பனங்கற்கண்டோடு சேர்த்து கொடுக்கலாம்.

வல்லாரை இலையை வாயில் போட்டு மென்று விழுங்கினால் குடல் புண்,குடல் நோய்,வாய்ப்புண், வாய் நாற்றம் ஆகியவை நீங்கும். வல்லாரை கீரை பொதுவாக இருதய பலத்துக்கும்,தாது விருத்திக்கும் உதவுகின்றது. வல்லாரை இலையை உலர்த்தி நன்குப் பொடித்து,பாலில் கலந்து தினமும் இரவு படுக்கைக்குச் செல்லும் முன் குடித்தால் வயிற்றில் உள்ள பூச்சிகள் அழிந்துபோகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *