கொரியா ஓபன் பெண்கள் டென்னிஸ் : அங்கிதா ரெய்னா தோல்வி – Dinaseithigal

கொரியா ஓபன் பெண்கள் டென்னிஸ் : அங்கிதா ரெய்னா தோல்வி

கொரியா ஓபன் பெண்கள் சர்வதேச டென்னிஸ் போட்டி சியோலில் நடந்து வருகிறது. இதன் ஒற்றையர் 2-வது சுற்று ஆட்டம் ஒன்றில் தரவரிசையில் 129-வது இடத்தில் இருக்கும் இந்திய வீராங்கனை அங்கிதா ரெய்னா 1-6, 3-6 என்ற நேர்செட்டில் 70-வது இடத்தில் உள்ள லின் ஹூவிடம் (சீனா) தோல்வியடைந்து வெளியேறினார்.

மற்றொரு ஆட்டத்தில் சமீபத்தில் நடந்த சென்னை ஓபனில் பட்டம் வென்றவரும், தரவரிசையில் 74-வது இடத்தில் இருப்பவருமான செக்குடியரசு வீராங்கனை லின்டா புருவிர்தோவா 1-6, 4-6 என்ற நேர்செட்டில் தரவரிசையில் 396-வது இடத்தில் உள்ள யானினா விக்மேயரிடம் (பெல்ஜியம்) தோல்வியை சந்தித்து ஏமாற்றம் அளித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *