விராட்கோலி சாதனையை முறியடித்து பாபர் அசாமை சமன் செய்த ரிஸ்வான் – Dinaseithigal

விராட்கோலி சாதனையை முறியடித்து பாபர் அசாமை சமன் செய்த ரிஸ்வான்

பாகிஸ்தானுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி 7 டி20 போட்டிகள் கொண்ட நெடுந்தொடரில் பங்கேற்கிறது. இதில் கராச்சியில் நேற்று நடைபெற்ற முதல் டி20 போட்டியில் இங்கிலாந்து அணி 6 விக்கெட்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது.

இந்த போட்டியில் பாகிஸ்தான் அணியின் தொடக்க ஆட்டக்காரர் முகமது ரிஸ்வான் 46 பந்துகளில் 68 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். இதன் மூலம் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அதிவேகமாக 2 ஆயிரம் ரன்கள் அடித்த வீரர்கள் பட்டியலில் விராட் கோலி சாதனையை முறியடித்து, பாபர் அசாமின் சாதனையை சமன் செய்தார்.

கோலி சர்வதேச டி20 போட்டிகளில் தனது 56-வது இன்னிங்ஸ்சில் 2,000 ரன்களை கடந்தார். பாகிஸ்தான் வீரர் பாபர் அசாம் ஏற்கனவே 52-வது இன்னிங்ஸில் இந்த சாதனையை படைத்து இருந்த நிலையில் ரிஸ்வானும் தனது 52-வது இன்னிங்சில் இந்த சாதனையை படைத்து உள்ளார். இதன் மூலம் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அதிவேகமாக 2000 ரன்களை கடந்த வீரர்களில் பாபர் அசாம், பாபர் அசாம் இருவரும் முதல் இடத்தில் உள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *