அஜித்தின் துணிவு படத்தின் செகண்ட் லுக் பீஸ்ட் பட போஸ்டரோட காப்பியா ? … கலாய்த்து தள்ளும் ரசிகர்கள் – Dinaseithigal

அஜித்தின் துணிவு படத்தின் செகண்ட் லுக் பீஸ்ட் பட போஸ்டரோட காப்பியா ? … கலாய்த்து தள்ளும் ரசிகர்கள்

சமீபகாலமாக தென்னிந்திய சினிமாவில் எந்த படத்தின் போஸ்டர்கள் வெளியானாலும் அது காப்பியா? என்று தேடுவதிலேயே இணையவாசிகள் அதிக ஆர்வம் செலுத்தி வருகின்றனர். தல அஜித்தின் துணிவு ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டைட்டில் காப்பி என ட்ரோல் செய்யப்பட்ட நிலையில், தற்போது படு அட்டகாசமாக வெளியாகி உள்ள செகண்ட் லுக் போஸ்டரும் விஜய்யின் பீஸ்ட் படத்தின் போஸ்டரின் காப்பி என ட்ரோல் செய்ய தொடங்கியுள்ளனர் . அண்மையில் நெல்சன் இயக்கத்தில் விஜய் நடித்த பீஸ்ட் படத்தின் செகண்ட் லுக் போஸ்டரில் நடிகர் விஜய் வெள்ளை சட்டை அணிந்து கொண்டு கீழே பார்ப்பது போன்ற போஸ்டர் காட்சியளித்திருந்தது . அதே போன்று போஸ் கொடுக்க வைத்து நடிகர் அஜித்துடன் நடத்திய போட்டோஷூட்டை 2வது லுக்காக வெளியிட்டுள்ளனர் என விஜய் ரசிகர்கள் ட்ரோல் பண்ணிக்கொண்டு வருகிறார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *