தல அஜித் நடிக்கும் ‘துணிவு’ பட திரைக்கதை…தேசத்தை உலுக்கிய பயங்கரமான கொள்ளை சம்பவத்தின் பின்னணியை கொண்டதா ? – Dinaseithigal

தல அஜித் நடிக்கும் ‘துணிவு’ பட திரைக்கதை…தேசத்தை உலுக்கிய பயங்கரமான கொள்ளை சம்பவத்தின் பின்னணியை கொண்டதா ?

தல அஜித் நடிக்கும் துணிவு படத்தின் கதை பற்றி தற்போது சமூக வலைதளங்களில் லேசாக விவாதிக்கப்படுகிறது. நேற்று முன்தினம் அஜித் ஏகே 61 பட டைட்டில் போஸ்டர் வெளியிடப்பட்டது. துணிவு என்று பெயரிடப்பட்ட டைட்டில் வெளியானது. இந்த டைட்டிலில் ஒரு சாய்வு நாற்காலியில் கையில் துப்பாக்கியுடன் அஜித் சாய்ந்து உட்கார்ந்து இருப்பது போல் காட்சியுடன் வெளியானது . தற்போது இந்த படத்தின் கதை குறித்த விவாதங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது. அதில் 1987 ல் நடைபெற்ற பிரபல வங்கி கொள்ளையை மையமாக வைத்தே படம் எடுக்கப்பட்டுள்ளது என பேசப்படுகிறது.  1987 ஆம் ஆண்டு பஞ்சாப் மாநிலம் லூதியானாவில் உள்ள ஒரு வங்கியில் புகுந்த கொள்ளையர்கள் துணிகரத்துடன் வங்கியில் உள்ள 5.7 கோடி ரூபாய் பணத்தை கொள்ளையடித்து சென்றனர். மிகப்பெரிய கொள்ளை சம்பவம் நடைபெற்றிருந்தது ஒருமொத்த இந்தியாவையே உலுக்கியது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *