ரசிகர்களை கவரும் விதமாக வெளியான பொன்னியின் செல்வன் படத்தின் முதல் ப்ரமோ – Dinaseithigal

ரசிகர்களை கவரும் விதமாக வெளியான பொன்னியின் செல்வன் படத்தின் முதல் ப்ரமோ

மணிரத்னம் இயக்கத்தில் நடிகர்கள் கார்த்தி உள்ளிட்டவர்களின் மிரட்டலான நடிப்பில் சோழர் காலத்தை கண்முன் கொண்டுவரும் முயற்சியில் ஈடுபட்டுள்ள பொன்னியின் செல்வன் படம் வரும் செப்டம்பர் 30ம் தேதி வெளியாக உள்ளது. இந்தப் படத்தின் சிறப்பான பிரமோஷன்களை படக்குழு முடுக்கி விட்டுள்ளது.இதற்கிடையே, , சமூக வலைதளங்களையும் படக்குழு சிறப்பாக பயன்படுத்தி வருகிறது. இந்த படத்தின் அடுத்தடுத்த பாடல்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டுவரும் படக்குழுவினர், தனித்தனியாக விக்ரம், ஜெயம் ரவி மற்றும் கார்த்தியின் கேரக்டர்களை முன்னிறுத்தும் போஸ்டர்களையும் வெளியிட்டது. பொன்னியின் செல்வன் படத்தின் நாயகர்களும் தங்களது ட்விட்டர் பக்கங்களில் தங்களது பெயரை மறைத்து, பொன்னியின் செல்வன் படத்தில் தாங்கள் ஏற்று நடித்த கதாபாத்திரங்களை வைத்துள்ளதும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. இந்நிலையில், இந்தப் படத்தின் முதல் ப்ரமோ தற்போது வெளியாகியுள்ளது. தமிழகத்தின் பாண்டிய அரசனின் கொலைக்கு பழிதீர்க்க சோழ நாட்டில் ஊடுருவிய விசுவாசிகளை இந்தப் ப்ரமோவின் காட்சிகள் விவரமாக காட்டுகின்றன. இதில் கிஷோர், ரியாஸ் கான் ஆகியவர்களை பார்க்க முடிகிறது. இந்தப் ப்ரமோவிற்கு தன்னுடைய குரல் மூலம் கமல்ஹாசன் வேற லெவெலில் உயிரோட்டம் கொடுத்துள்ளார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *